Wednesday, 1 May 2013

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள் :

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)
மஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது

2.) மைதா மாவில் செய்த உணவுகள் -
மைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்

3.) ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)

4.) எண்ணையில் பொரித்த உணவுகள்

5.) குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்

6.) நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்

7.) மாவுச்சத்து அதிகமுள்ள-உருளைக்கிழங்கு,வாழைக்காய்,வாழைப்பழம்

8.) இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்

9.) கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்

10.) காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை

Saturday, 27 April 2013

புற்று நோயைத் தடுக்கும் உணவுகள்(Foods to Battle Cancer)

                                 புற்று நோயைத் தடுக்கும் உணவுகள்வெங்காயம்:


வெங்கயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க்கும் வேதிப்பொருள் உள்ளது.சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது

மாதுளம்பழம்:

மாதுளம்பழத்தில் எலாஜிக் ஆசிட்(ellagic acid) என்ற மூலப்பொருள் உள்ளது.இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும் .தக்காளி
தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப்பொருள் மிகச்சக்டிவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட். இது பல்வேறுவகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மைவாய்ந்த்து. குறிப்பாக ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றினை தடுக்கும்


முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்:
இவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுசெல்களின் வள்ர்ச்சிவேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது

.

தேநீர்
தேநீரில் உள்ள கேட்டச்சின் என்ற பொருள் நுரையீரல் .மார்பு,ப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றினைத் தடுக்கவல்லது.முக்கியமாக க்ரின் டீ ">எனப்படும் பச்சை தேநீரில் இந்த பலன்கள் அதிகம்.


மஞ்சள்
குர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது.தமிழர்கள் சங்ககாலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்


ஆளி விதை(Flaxseed)
இதில் உள்ள ஒமேகா 3 (அமோகா அல்ல)  கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை


சால்மன் மீன்
  இதில் உள்ள   ஒமேகா 3 கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை


சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
  நமக்கு  நன்மை செய்யும் ஒரே கிழங்கு இது. இதில் நிறைய பீட்டா கரோட்டின் என்ற நிறமி உள்ளது.இது நுரையீரல் .மார்பு,இரைப்பை மற்றும் குடல் புற்றுநோயைத்தடுக்க வல்லது.திராட்சை,ஆரஞ்சு,ப்ரக்கோலி
மேலே கூறிய மூன்று பொருட்களிலும் விட்டமின் சி நிறைய உள்ளது. இவைகல் புற்றைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மைசெய்கின்றன


.
வேர்க்கடலை:
இதில் உள்ள விட்டமின் இ - கல்லீரல்,பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றைத்தடுக்கவல்லது.(கடலை நல்ல்ு)

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா வலைத்தளம்

Sunday, 7 April 2013

குழந்தைகளுக்கு வரும் வெயில்கால நோய்கள் :

குழந்தைகளுக்கு வரும் வெயில்கால நோய்கள் :

1.வேனல் கட்டிகள்(boils,furuncle)
2.சிரங்கு, புண் (impetigo)
3.வியர்க்குரு (prickly heat)
4.நீர் கடுப்பு (strangury)
5.வயிற்றுப்போக்கு (loose stools)

வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை சுரக்கும்.இதனால் பாக்டீரியா கிருமிகள் உரோமத்தின் வேர்களில் பல்கிப்பெருகி வேனல்கட்டிகளை ஏற்படுத்துகின்றன . இவை சிவந்து வலியை ஏற்படுத்தும் .அதிக எண்ணிக்கையில் வரும்போது காய்ச்சலையும் உருவாக்கும் .

சிரங்கு-பாக்டீரியாக்கள் மூலம் பரவும் வியாதி.சுகாதரக் குறைபாட்டால் இவைகள் ஏற்படும்

தடுப்புமுறை : தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்.மண்ணில் விளையாடி வந்தபின் நன்கு சோப்பு போட்டு கழுவவேண்டும்

நீர்கடுப்பு : வெயில்காலங்களில் குழந்தைகள் போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பதால் சிறுநீர் போகும்போது எரிச்சல்,சொட்டு சொட்டாக போவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.சிறுகுழந்தைகள் சொல்லத்தெரியாமல் அழுதுகொண்டேயிருக்கும்.

தடுப்புமுறை :அதிக அளவில் திரவ உணவுகளை (பழச்சாறு,இளநீர்,காய்கறி சூப்) சேர்த்துக்கொள்ளவேண்டும். நிறைய நீர் அருந்த ஊக்குவிக்கவேண்டும் .

வயிற்றுப்போக்கு மற்றும் வியர்க்குரு விரிவாக கீழ்காணும் பதிவுகளில் உள்ளது

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குரு:
http://babyclinics.blogspot.in/search?q=Prickly+heat&m=1

குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு :

http://babyclinics.blogspot.in/search?q=Diarrhea&m=1

Saturday, 6 April 2013

ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்

ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்

1. முத்தடுப்பு ஊசி -ஊக்கமருந்து DPT Booster
(கக்குவான்,தொண்டைஅடைப்பான்,ரணஜன்னி )

2. மூவம்மை தடுப்பூசி - MMR Booster
மூவம்மை தடுப்பூசி (மணல்வாரி அம்மை,தாளம்மை,ருபெல்லா) முதல் தவணை 15 வது மாதத்தில் போடவேண்டும் .அதன்பின் ஊக்கமருந்து 5 வயதில் போடவேண்டும்

3.சிக்கன்பாக்ஸ் தடுப்பூசி-chickenpox vaccine Booster
கொத்தமல்லி அம்மை,நீர்குளுவான் என்று அழைக்கப்படும் சிக்கன்பாக்ஸ் அம்மைக்கு முதல் தடுப்பூசி 15 வது மாதங்களில் போடவேண்டும்.அதன்பின் ஊக்கமருந்து தடுப்பூசி 5 வயதில் போடவேண்டும் .


4.குடற்காய்ச்சல் தடுப்பூசி-TYPHOID vaccine Booster
குடற்காய்ச்சல் தடுப்பூசி இரண்டு வயதில் போடவேண்டும்.அதன்பின் 3 வருடங்களுக்கு ஒருமுறை ஊக்க ஊசி (booster dose) போடவேண்டும்

5. போலியோ நோய் தடுப்பு சொட்டுமருந்து
வாய்வழி தரும் ஊக்கமருந்து

Tuesday, 2 April 2013

நியுமோகாக்கல் நோய் என்றால் என்ன?
 நியுமோகாக்கல் நோய் என்றால் என்ன?
       
        ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்னும் பாக்டீரியா தாக்குவதால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களின் தொகுப்பை நியுமோகாக்கல் நோய் என்று அழைக்கிறோம் .
அவைகள்
     
      1.Meningitis –மூளைச்சவ்வு அழற்ச்சி நோய்
        2.pneumonia-நிமோனியா சளி
       3.septicemia- ரத்தத்தில்  நச்சுக்கிருமிகள் பரவும் நிலை
         4.otitis media – காதில் சீழ் பிடித்தல்

நியுமோகாக்கல் நோய் யாரை அதிகம் தாக்கும் ?
   

      1.) 2 வயதிற்கு குறைவான குழந்தைகள்

      2.)அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள்


       3.)எதிர்ப்புசக்தி குறைவான் குழந்தைகள்

       4.)குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்ட குழந்தைகள்

எவ்வாரு பரவுகிறது?
    இந்த கிருமிகள் குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களின் மூக்கு மற்றும் தொண்டையில் வளர்ந்து கொண்டிருக்கும்.

 சிலவேளைகளில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது வளர்ந்து கொண்டிருக்கும். பின் இவை தும்மல்,இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவும். 

குழந்தைகளுக்கு  நோயெதிர்ப்பு சக்தி  குறைவென்பதால் எளிதில் அவர்களை தாக்கும் தன்மையுடையவை.

பாதிப்புகள்:

Meningitis எனப்படும் மூளைச்சவ்வு அழற்ச்சியினால் – காது கேளாமை, மூளைவளர்ச்சி குறைபாடு, பக்கவாதம் மற்றும் கடுமையான நோயினால் மரணம் கூட நிகழலாம்
Septicemia- சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லையெனில் மரணத்தை ஏற்படுத்தும்
Otitis media- காதில் அடிக்கடி சீழ்வடிதல், காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும்

Pneumonia-கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்

தடுக்கும் முறை:
    சுத்தம், சுகாதர சூழ்நிலைகளில் வாழ்வது.

    முதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் தருவது மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு இணையுணவுடன் தாய்ப்பாலை 2 வயதுவரை தொடர்ந்து தருவது.


நிமோகாக்கல் தடுப்பூசியை குழந்தை பிறந்த 6 வது வாரம், 10 வது வாரம், 14வது வாரம்- என மூன்று தவணைகள் போடவேண்டும்.

ஊக்கத்தடுப்பூசி 18 வது மாதம் போடவேண்டும்.  

Sunday, 3 February 2013

சிறுகுழந்தைகளுக்கு விக்கல் வருவது ஏன்?

வயிற்றுக்கும் நுரையீரலுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் உதரவிதானம்,(DIAPHRAGM) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய தசைப்பகுதியாகும் . இது தூண்டப்பட்டால் ,எரிச்சலூட்டப்பட்டால் வருவதே விக்கல் . விக்கல் வரும்போது உதரவிதானத்தசை வேகமாக சுருங்கி விரிகிறது.
 சிறுகுழந்தைகள் பாலுடன் காற்றையும் சேர்த்து வேகமாக விழுங்கும் இயல்புடையவை.இதனால் இரைப்பை(stomach) விரிவடைந்து மேலே உள்ள உ.விதானத்தை தொடுவதால் விக்கல் வரும். இதைத்தவிர்க்க பால் தந்தவுடன் குழந்தையை தோளில் போட்டு குடித்த காற்று முழுவதும் ஏப்பம் (Burping) வழியே வெளியேறச் செய்யவேண்டும்.

சிலநேரங்களில் எந்தவொரு காரணமும் இன்றிகூட விக்கல் வரலாம். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மருந்துகொடுத்தால் சரியாகிவிடும்


         

கிண்டில் மின்னூல்கள்

அமசான் கிண்டிலில் மூன்று  மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r...