நியுமோகாக்கல்
நோய் என்றால் என்ன?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ்
நிமோனியா என்னும் பாக்டீரியா தாக்குவதால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களின் தொகுப்பை
நியுமோகாக்கல் நோய் என்று அழைக்கிறோம் .
அவைகள்
1.Meningitis –மூளைச்சவ்வு அழற்ச்சி நோய்
2.pneumonia-நிமோனியா சளி
3.septicemia- ரத்தத்தில் நச்சுக்கிருமிகள் பரவும் நிலை
4.otitis media – காதில் சீழ் பிடித்தல்
நியுமோகாக்கல்
நோய் யாரை அதிகம் தாக்கும் ?
1.) 2 வயதிற்கு குறைவான குழந்தைகள்
2.)அடிக்கடி நோய்வாய்ப்படும்
குழந்தைகள்
3.)எதிர்ப்புசக்தி
குறைவான் குழந்தைகள்
4.)குழந்தைகள் காப்பகத்தில்
விடப்பட்ட குழந்தைகள்
எவ்வாரு பரவுகிறது?
இந்த கிருமிகள் குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களின்
மூக்கு மற்றும் தொண்டையில் வளர்ந்து கொண்டிருக்கும்.
சிலவேளைகளில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது
வளர்ந்து கொண்டிருக்கும். பின் இவை தும்மல்,இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவும்.
குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவென்பதால் எளிதில் அவர்களை தாக்கும் தன்மையுடையவை.
பாதிப்புகள்:
Meningitis எனப்படும்
மூளைச்சவ்வு அழற்ச்சியினால் – காது கேளாமை, மூளைவளர்ச்சி குறைபாடு, பக்கவாதம் மற்றும்
கடுமையான நோயினால் மரணம் கூட நிகழலாம்
Septicemia- சரியான
நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லையெனில் மரணத்தை ஏற்படுத்தும்
Otitis media-
காதில் அடிக்கடி சீழ்வடிதல், காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும்
Pneumonia-கடுமையான
காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்
தடுக்கும் முறை:
சுத்தம், சுகாதர சூழ்நிலைகளில் வாழ்வது.
முதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் தருவது
மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு இணையுணவுடன் தாய்ப்பாலை 2 வயதுவரை தொடர்ந்து தருவது.
நிமோகாக்கல் தடுப்பூசியை
குழந்தை பிறந்த 6 வது வாரம், 10 வது வாரம், 14வது வாரம்- என மூன்று தவணைகள் போடவேண்டும்.
ஊக்கத்தடுப்பூசி
18 வது மாதம் போடவேண்டும்.
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி ஐயா...
ReplyDelete