உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்
1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)
மஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது
2.) மைதா மாவில் செய்த உணவுகள் -
மைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்
3.) ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)
4.) எண்ணையில் பொரித்த உணவுகள்
5.) குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்
6.) நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்
7.) மாவுச்சத்து அதிகமுள்ள-உருளைக்கிழங்கு,வாழைக்காய்,வாழைப்பழம்
8.) இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்
9.) கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்
10.) காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை
Wednesday, 1 May 2013
Subscribe to:
Posts (Atom)
New blog
Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org
-
அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r...
-
10 வயதிற்கு குறைவான குழந்தைகளை பாதிக்கும் இந்த நோய். இது வைரஸ் கிருமி மூலம் பரவும் ஒரு தொற்றுநோய். காக்சாக்கி மற்றும் எண்டிரோ வைரஸ் கிரும...
-
கிரீன் டீயின் நன்மைகள்........ * ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. * உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. * உடலில்...