Wednesday, 23 November 2011

பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?

சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.

ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.

எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!

posted from Bloggeroid

Saturday, 8 October 2011

குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


   சில தகவல்கள்:


எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து


சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம்


பூனை,குரங்கு ,நரி,ஓநாய், வவ்வால் போன்றவை  மூலமும் ரேபிஸ் பரவும் 


ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒண்றுமில்லை.மரணம் நிச்சயம்


வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு.எனவே ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும்.


உணவு கட்டுப்பாடு ஏதும் கிடையாது .


 முதலுதவி :


நல்லா சோப் போட்டு கழுவ வேண்டும் .இது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும்.அதன் பின் ஆண்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம்.
கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது .


உடனே முதல் தடுப்பூசியை  போட்டுக்கொள்ளவேண்டும்.


கடியின் வகைகள்:


category I : நாயை தொடுதல்,உணவு ஊட்டுதல்,காயம் படாத தோலை நக்குதல்


               மருத்துவம் : தேவையில்லை


category II: சிராய்ப்பு காயம்,கவ்வுதல்,குறைவான அளவில் ரத்தக்கசிவு


             மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி
category III: ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல்,ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், 
நரி,ஓநாய்,வவ்வால் கடி
       மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி+ இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து


ஊசிகள்:


1. டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும் 
போடவேண்டியது
2. ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவமனையில் இது இலவசமாக் போடப்படும்
தனியாரில் ரூ 350-500 வரை ஆகும் 
3.இம்யுனொக்லொபின் -அதிகமான அளவில்  
உள்ள காயதிற்கு கட்டாயம் போட 
வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கும் .


வேறு சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

Saturday, 30 July 2011

உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7

     உலக தாய்ப்பால் வாரம் கஸ்ட் 1 -7வரை கொண்டாடப்படுகிறது.தாய்ப்பாலின் அருமைகளை விளக்கவே இந்த விழா கொண்டாடப்படுகிறது .

உலக தாய்ப்பால் வாரம் கஸ்ட் 1 -7

குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .


    முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்லலாம் .


இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்


குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .


எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .                                                              

சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.


பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பு புற்றுநோய் , ஓவரி புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் .


பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பால் கொடுத்தால் தாய்க்கு உதிரபோக்கு குறையும் . ஏனெனில் பால் குடிக்கும் போது oxytocin என்ற ஹார்மோன் சுரப்பதால் அது கர்பப்பையை சுருங்கச்செய்து  ரத்தபோக்கைக்குறைக்கும் .தொடர்ந்து ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் மாதவிடாய் தள்ளிபோடப்படும் , இதன் முலம் அடுத்த பிரசவத்தைத் தடுக்கமுடியும் .தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு . எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்

தண்ணீர் கூடத் தரத் தேவை இல்லை ( கோடையில் கூட ) ஏனென்றால் பாலில் 88 % நீர் உள்ளது .ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தரவேண்டும்தாய்ப்பால் இரண்டு வயது வரை தர வேண்டும் .குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது அளவில் குறைவாக , மஞ்சள் நிறத்தில் இருக்கும் . குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மருந்து சீம்பால் ஆகும் . எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வேண்டும் .( கழுதைப்பால் , சீனித்தண்ணி, சர்க்கரை ஆகிய பொருள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது , இது தவறான பழக்கம் .)பால் பரிசுத்தமானது , எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே .பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன .(secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) எனவே வயிற்றுபோக்கு , சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும் .பால் இயற்கையானது எனவே எளிதில் செரிக்கும் . 
குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான CYSTIENE ,TAURINE ஆகிய சத்துக்கள் தாய்பாலில் சரியான அளவில் உள்ளன . ( கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும் , ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது . ) தாய் பால் மட்டுமே சரியான ஊட்டசத்தை சரியான நேரத்தில் தரும்
 
வேலைக்கு செல்லும் தாய் :

தாய் பாலே குழந்தைக்கு அரு மருந்து . வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின் தரலாம் .சாதாரண அறைவெப்ப நிலையில் எட்டுமுதல் பத்துமணி நேரம் வைக்கலாம் .குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும் ,அதனுள் உள்ள ப்ரீசர்(-20* c) இல் மூன்று மாதங்கள் வைத்திருக்கலாம் .எனவே வேலைக்கு செல்வதை காரணமாக சொல்லி தாய்ப்பால்தராமல் இருக்காதிர்கள்Monday, 13 June 2011

நண்பர்களுக்கு நன்றி!!!

                                                

ஜூன் 13 தேதியுடன் தமிழில் குழந்தை நலம் என்ற வலைப்பூவை எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது . என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த பதிவு .
பின்னுட்டம்  இட்டு ஊக்குவித்த நண்பர்களுக்கும் நன்றி !

வரவேற்பறையில்  வெளியிட்டு பாராட்டிய  ஆனந்த விகடன்  இதழுக்கும் நன்றி !

Friday, 10 June 2011

குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?

குழந்தைகளுக்கு டீ,காபி  எப்பொழுது  தர ஆரம்பிக்கவேண்டும் ?

டீ,காபி போன்ற  உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது .


டீ தூளில் உள்ள  மூல பொருள்கள் :

6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic substances, 2% dectrine, 3% pectic acid and pictine, 17% tannic acid, 4% chlorophyll and raisin, 26% cellulose and 7% salt.டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக்  அமிலம்  இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும் .எனவே அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும் . மேலும் இது பசியை  குறைக்கும் .


டீயில் 2 % கேபின்  உள்ளது .புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைபடுத்தும்  (addictive ) பொருள் ஆகும்.

நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும்  விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை  இது ஏற்படுத்தும்.


கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை  தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனிவே இந்த பழக்கத்தை  விட்டால் தலை வலி ,சோர்வு  ,நடுக்கம்  முதலியன ஏற்படலாம் (withdrawl  symptoms )
   டீ ஒரு diuretic  அதாவது  அதிகமான அளவில் சிறுநீரை  வெளியேற்றும் தன்மைகொண்டது .    உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும் .எனவே நீர் இழப்பு ஏற்படும் .மேலும் இது சிறுநீரகங்களுக்கு  வேலை பளுவை அளிக்கிறது.சாதாரண குழந்தைகளை  விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும் .


டீ நேரடியாகவும் ,மறைமுகவாகவும்  மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது .டீயில் உள்ள alkaloid  பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல்  தடுப்பதால் iron deficiency  anemia  என்ற வகை ரத்த சோகை  ஏற்பட வாய்ப்பு உள்ளது.


காபியில் கேபின் அளவு  டீயில் இருப்பதைப்போல இருமடங்கு  உள்ளது .மேலே சொன்ன  விளைவுகள்  இருமடங்கு ஏற்படும் .மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது .எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு  ஆபத்தானது .

(சமீபத்தில்  குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது .)

4  வயதுக்கு  மேற்பட்ட குழந்தைகளுக்கு  ஒருமுறை மட்டும்  குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ  தரவும் .இடையில்  விடுமுறை நாட்களில்  இதற்கும் விடுமுறை தரவும் .
பின் இணைப்பு : டாப் 10 சோர்வடைய  காரணங்கள்


Tuesday, 17 May 2011

பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?


பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?

          தேன் என்றாலே  உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து  என்ற கருத்து பரவலாக  உள்ளது . ஆனால் தேன் மலரில் உள்ளபோது  சுத்தமாகவே உள்ளது பின்பு  தேனீயால் எடுக்கப்பட்டு  தேன்கூட்டில்  சேகரிக்கப்பட்டு அதனை  எடுத்து நாம் உபயோகிக்கும்போது   அதில்  அல்லேர்ஜியை உண்டாக்கும்  மகரந்த  தூள்களும்  , மிக  கடுமையான  பொடுலிசம்(BOTULISM ) என்ற  வியாதியை  உண்டாக்கும்   Clostridium bacteria  இருக்கலாம் .


எனவே குழந்தைகளுக்கு  குறிப்பாக  ஒரு வயதுக்கு  குறைவான  குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .


BOTULISM  வந்தால்  தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
  
உடல் தளர்ச்சி -குழந்தையை  தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது 

பால் குடிக்க  மறுப்பது

சோம்பலாக   அழுவது (WEAK  CRY )

மலச்சிக்கல்


எனவே தேனை  நேரடியாகவோ  மறைமுகமாகவோ ஒரு வயது  குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க  கூடாது  .

           


அலர்ஜி , ஆஸ்த்மா  உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும்  தேன் தராமல் இருப்பது  நல்லது 


 honey should not be fed to infants younger than 1 year old.

 Clostridium bacteria that cause infant botulism usually live  in soil and dust. they can also contaminate certain foods esp honey in particular. which causes botulism in less than one year


Infant botulism can cause

 muscle weakness, 
 poor sucking,
a weak cry,
constipation,
decreased muscle tone (floppiness).Parents can reduce the risk of infant botulism by not introducing honey or any processed foods containing honey (like honey graham crackers) into their baby's diet until after the first birthday.

older kids can  better able to handle the bacteria.Wednesday, 6 April 2011

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :


குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ?


குழந்தைகளுக்கு  மருந்து தரும் முன்  இரண்டு  விசயங்களை  நாம் கவனிக்க வேண்டும் I .வயது  II .எடை

எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.


அதே போல்  வயதும்  மிக முக்கிய காரணி ஆகும் .பல  மருந்துகளின்  அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .


குழந்தைகளை உட்கார  வைத்தே மருந்து   தருவது நல்லது .படுக்க வைத்து  தரும் போது புரை  ஏறுதல்  என்று சொல்லப்படும்  மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .

மருந்து  கொடுக்கும் முன்  அதை  தருபவர் கைகளை  நன்கு சுத்தம்  செய்து கொள்ளவேண்டும் .அளவுகள் :

குழந்தைகளின்  எடைக்கு  ஏற்பவே  மருந்துகளை  தரவேண்டும் .   மருத்துவர் சொன்ன அளவை  சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .ஒரு சி.சி  என்பது  - ஒரு மிலி

ஒரு டீ ஸ்பூன்  என்பது  -5  மிலி

அரை  டீ ஸ்பூன்  என்பது -2 .5  மிலி 

ஒரு டேபிள்  ஸ்பூன்  என்பது -15  மிலி
(டீ யை  விட  டேபிள்  தான் பெருசு )
dropper  எனப்படும்  சொட்டு மருந்து போடும்  குழல் உபயோகிக்கும் போது  மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .சொட்டுகுழலில் (dropper )  ஒரு மிலி  என்பது  15 -20  சொட்டுகள்  ஆகும் .


குழலின்  முழு அளவு  ஒரு மில்லி  ஆகும் .


குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .


மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என  கவனித்து  மருந்து  தரவேண்டும் .


மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில்  குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .


அதாவது  ௦.5  மிலி  என்பது  எண்ணிகையில்  10  சொட்டுக்கு சமம் .


ஒரு மில்லி  என்பது  எண்ணிகையில் 15 -20  சொட்டுக்கு சமம் .


(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20  சொட்டும் , சற்றே கூழ்  போன்ற மருந்துகள்  15  சொட்டும் இருக்கும் )

பாட்டில் மூடியில்  உள்ள  அளவுகள் சில நேரம்  மாறலாம் .எனவே நாம் மருந்துகளை  அளக்க  சுத்தமான  புது  சிரிஞ்  கொண்டு அளந்தால்  அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .
மருத்துகளை தோரயமாக  அளக்காமல் சரியாக அளந்து  தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே  மருந்து  தருகிறார் .எனவே அவர் எழுதிய  அளவை சரியாக தரவும் .


குறைவாக  கொடுத்தால் மருதின் வீரியம்  சரியான அளவில் கிடைக்காது .
அதேபோல்  எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ  அத்தனை வேளை  தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).


சுரத்திற்கு  தரப்படும்  பாரசிடமால்  மருந்தை 4 -6  மணி நேரத்திற்கு  ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html


ஆன்டி பயாடிக் மருந்துகளை  மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5  நாள் வரை  தரவேண்டும் ஜுரம்  நின்றாலும்  இதனை  தொடர்ந்து தரவேண்டும் .


dry syrup  எனப்படும்  பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர்  கலந்த பின்பே  உபயோகிக்க வேண்டும் .


சிலர்  அவ்வப்போது  பொடியை  எடுத்து அதில் சிறிது  தண்ணீர் கலந்து கொடுக்கும்  பழக்கத்தை  செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு  4 -7  நாட்கள்  மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி  மருந்து பாட்டிலின்  உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .


ஒரு முறை வாங்கிய  மருந்தை மீண்டும் மீண்டும்  மருத்துவரை கேட்காமல்  தரக்கூடாது .சில மருந்துகளை திறந்தபின்  குறிப்பிட்ட  நாள்கள்  தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி  தேதி  முடியாவிட்டாலும்  திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .சில தடை  செய்யப்பட்ட  மருந்துகள்  கடைகளில்  கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை  இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .உதாரணமாக நிமுசுலைட் என்ற  மருந்தை 
  குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது  என்று தடை செய்தும்  அது  மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.htmlஅதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும்  மருந்தை 12  வயதுக்கு குறைந்த  குழந்தைகளுக்கு  உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும்  தவறாக  பயன்படுத்த படுகிறது .

Tuesday, 5 April 2011

நன்றி நன்றி நன்றி !!!

      இந்த வார ஆனந்த விகடன் வரவேற்பறை  பகுதியில்  எனது  குழந்தை  நலம்  வலைப்பூவை  பற்றி குறிப்பிட்டு உள்ளது .

     இதை தெரிவித்த  நண்பர்களுக்கும்  வாழ்த்திய  நண்பர்களுக்கும் மற்றும்  ஆனந்த விகடன் இதழுக்கும்  நன்றி  நன்றி  நன்றி !!!

ஆனந்த விகடன் இதழ் 06 .04 .2011   
 

Tuesday, 22 March 2011

குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?(WEANING/COMPLEMENTARY FEEDING)குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை  தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் .தண்ணீர் கூட தர தேவை இல்லை .

இதற்க்கு EXCLUSIVE BREAST  FEEDING  என்று பெயர் .கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை .ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .

  இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING  என்று பெயர் .
WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to  the baby (UNICEF)WEANING  என்றால் முற்றிலும்  தாய்ப்பாலை  நிறுத்திவிட்டு  உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால்  தற்போது COMPLEMENTARY  FEEDING  என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது .நான்கு மாதங்களுக்கு  பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை  செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன .


தலை நன்கு நிமிர்ந்து  நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு  பிறகே


குழந்தையின் எடை 5  மாதத்தில் பிறந்ததை போல்  இரு மடங்காக  அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும் . மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும்  இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும் .
குடலில் உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும்  4 -5  மாதங்களில்தான் .

எனவே 180 நாட்கள் முடிந்தபிறகே இணை உணவுகளை  ஆரம்பிப்பது  நல்லது .      முதலில் ஏதேனும் ஒரு  தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது  பழகிய பிறகே  இரண்டு அல்லது  மூன்று  தானிய  கலவைகளை  சேர்த்து அரைத்து  தர வேண்டும் .

அரிசி சாதம் மிகவும் எளிதில் ஆரம்பிக்க சிறந்தது .ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்  மட்டும் தரவேண்டும் .படிப்படியாக  இந்த அளவை அதிகரிக்க வேண்டும் .


தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும் .


     ஒரு வயது வரை  உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை  போல் நூறு மடங்கு கலோரி  தேவை . அதாவது  6 கிலோ  குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு  தேவை .எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக  பாலும்  இணை உணவும்  தரவேண்டும் .ஐஸ் போடாத வீட்டில் செய்த  பழச்சாறு  6  மாதம் முதல் தரலாம் . ஆரஞ்சு , ஆப்பிள்  சிறந்தது .


நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6  மாதம் முதல் தரலாம்


முட்டை - 7  -9  மாதங்களில் தரலாம் . முதலில்  மஞ்சள் கருவும்  பின்பே வெள்ளை  கரு தரவேண்டும் . ஏனெனில் வெள்ளை  கரு சில குழந்தைகளுக்கு  ஒவ்வாமையை  ஏற்படுத்தலாம் .


6 -8  மாதங்களில் மசித்த  உருளை கிழங்கு , மசித்த பருப்பு  ஆகியவற்றை தரலாம் .


மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி  ) 9 -12  மாதங்களில்  தரவேண்டும் .


ஒரு வயது ஆகும்போது  வீட்டில்  செய்யும் எல்லா   உணவுகளையும்  தரலாம் .


அசைவ  உணவை  ஒரு வயதுக்கு  பின்பே ஆரம்பிப்பது  நல்லது .(முட்டை சைவம் தானே ?!!)

ஒரு வயதுடைய  குழந்தை  அம்மா சாப்பிடும்  அளவில் பாதி அளவு  உணவு சாப்பிடவேண்டும்  .(மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )

ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி  தேவை .தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன்  சேர்த்தே தரவேண்டும் .இரண்டு வயது வரை தருவது கட்டாயம் .அதற்க்கு மேல் கொடுப்பது  தனிப்பட்ட விருப்பம் .,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர் )


COMPLEMENTARY  FEEDING -இணை உணவு  ஒரு மிகப்பெரிய  பகுதி  . முடிந்தவரை எழுதி உள்ளேன் .எனவே உங்க சந்தேகங்களை  பின்னுட்டத்தில்  தெரியபடுத்தவும் .

Saturday, 19 February 2011

குழந்தைகளுக்கு எப்பொழுது ,எப்படி புரதமாவு (horlicks,complan,pediasure) தரவேண்டும்?

குழந்தைகளுக்கு 1 வயதிற்குப் பிறகே ஹார்லிக்ஸ், காம்ப்ளான்,பிடியாஸுர் போன்ற புரத பானங்களை தர வேண்டும்.

புரத சத்து செரித்த பின் எஞ்சிய கழிவு பொருளான யூரியா ,யூரிக் ஆஸிட் போன்றவை சிறுநீரகம் மூலம் வெளியேற்ற படுகிறது. எனவே 1 வயதுக்கு குறைவான குழந்தைகளின் சிறுநீரக்்திற்கு அதிக வேலை பளு ஏற்படாமல் இருக்க மேலெ சொன்னவற்றை தவிர்க்க வேண்டும்.

புரத மாவுகள் அதிக படியான சூட்டில் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.எனவே குளிர்ந்த அல்லது மிதமான சூடு உள்ள பால் அல்லது தண்ணீரில் கரைத்து தரவேண்டும்.

புரதமாவு கொடுக்கும் போது தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும்.அப்படியே அள்ளி சாப்பிடுவது தவறு!
Published with Blogger-droid v1.6.7

Sunday, 6 February 2011

விளையாட்டும் உடல் நலமும்!

தினமும் அரை மணி நேரமாவது குழந்தைகளை விளையாட செய்தால் அவர்களின் நினைவு திறன் அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே உங்கள் குழந்தையை புத்தகத்திடம் இருந்து விடுவித்து விளையாட விடுங்கள்.

(மொபைலில் இருந்து முயற்சி செய்த முதல் தமிழ் பதிவு)

Published with Blogger-droid v1.6.7

பிறந்த குழந்தைக்கு இருக்கும் பற்கள் (பிறவி பற்கள் )

பிறந்த குழந்தைக்கு இருக்கும் பற்கள் (பிறவி பற்கள் )

பொதுவாக 6 -8  மாதங்களில் குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்க தொடங்கும் .ஆனால்  அரிதாக  பிறக்கும் போதே சில குழந்தைகளுக்கு பற்கள் இருக்கலாம் .இதற்க்கு NATAL TEETH  என்று பெயர் .


பொதுவாக கீழ்வரிசை நடுபற்களில் இது காணப்படும் .எல்லா பிறவி பற்களையும் நீக்க தேவை இல்லை .

இதில் இரு வகைகள் உள்ளன :

I .PREDECIDUOUS TEETH : இது 4000  இல் ஒரு குழந்தைக்கு இருக்கலாம் .இது ஏற்கனவே ஈறுகளின் உள்ளே மறைந்துள்ள பால் பற்களின் மீது தோன்றும் ஒரு அதிகபடியான பல் ஆகும் .இது வலுவில்லாமல் ஆடிக்கொண்டு இருக்கலாம் .எனவே இதை நீக்கிவிடுவது நல்லது .

II .TRUE DECIDUOUS TEETH : இது 2000 இல் ஒரு குழந்தைகளுக்கு இருக்கலாம் .இது உண்மையான பால் பற்கள் ஆகும் .ஆனால் சற்று முன்கூட்டியே முளைத்து விடுகிறது .இதனே நீக்க கூடாது .

மேலே சொன்ன இரு வகைகளை  X -RAY எடுத்து பார்ப்பதன் மூலம் வேறுபடுத்தி அறியலாம் .


ஏன் நீக்கவேண்டும் :

 வலுவில்லாத , ஆடிகொண்டிருக்கும் பல் மூச்சு குழாயினுள் சென்று மூச்சு திணறலை ஏற்படுத்தலாம் .
எனவே மருத்துவர் ஆலோசனை பெற்று நீக்கிவிடுவது நல்லது .

பின் குறிப்பு : அதிர்ஷ்டதிர்க்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை .ஆனால் சில நாடுகளில் இதனை ஒரு கெட்ட சகுனமாக கருதி பிறந்த குழந்தைகளை கொன்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன .

Saturday, 1 January 2011

ஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா ?ஜுரம் என்பது  ஒரு அறிகுறி  மட்டுமே , அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே .http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.htmlஆனால் சிறு குழந்தைக்களுக்கு  ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல் ,குடிக்காமல் இருக்கும் .இது உடலில் உள்ள  நீர் சத்தை குறைத்துவிடும் .இது மேலும்  உடல் வெப்பத்தை  அதிகரிக்கும் .எனவே ஜுரம் வந்தால் செய்யவேண்டியது என்ன ?


அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழச்சாறுஎளிதில் காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும் .முடிந்தால் டயபரை  கூட கழட்டிவிடுவது நல்லது .
http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_15.html


ஸ்வெட்டர் கண்டிப்பாக போடகூடாது .ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் .எனவே கண்டிப்பா  கூடாது .இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு .


http://doctorrajmohan.blogspot.com/2010/06/febrile-fits.html


ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும் !


 சரி ஸ்வட்டர்  எப்போது போடலாம் :

எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க்ப் பயன்படுத்தலாம்.

பயணம் செய்யும்போது ,குளிர்ப்ரதேசங்களுக்கு  செல்லும்போது ,


இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...