Saturday, 27 April 2013

புற்று நோயைத் தடுக்கும் உணவுகள்(Foods to Battle Cancer)

                                 புற்று நோயைத் தடுக்கும் உணவுகள்



வெங்காயம்:


வெங்கயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க்கும் வேதிப்பொருள் உள்ளது.சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது

மாதுளம்பழம்:

மாதுளம்பழத்தில் எலாஜிக் ஆசிட்(ellagic acid) என்ற மூலப்பொருள் உள்ளது.இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும் .



தக்காளி
தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப்பொருள் மிகச்சக்டிவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட். இது பல்வேறுவகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மைவாய்ந்த்து. குறிப்பாக ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றினை தடுக்கும்


முட்டைக்கோஸ்,காலிஃபிளவர்:
இவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுசெல்களின் வள்ர்ச்சிவேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது

.

தேநீர்
தேநீரில் உள்ள கேட்டச்சின் என்ற பொருள் நுரையீரல் .மார்பு,ப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றினைத் தடுக்கவல்லது.முக்கியமாக க்ரின் டீ ">எனப்படும் பச்சை தேநீரில் இந்த பலன்கள் அதிகம்.


மஞ்சள்
குர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது.தமிழர்கள் சங்ககாலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்


ஆளி விதை(Flaxseed)
இதில் உள்ள ஒமேகா 3 (அமோகா அல்ல)  கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை


சால்மன் மீன்
  இதில் உள்ள   ஒமேகா 3 கொழுப்பு எண்ணைகள் புற்றுசெல்களூக்கு எதிராக போராடும் தன்மைவாய்ந்தவை


சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
  நமக்கு  நன்மை செய்யும் ஒரே கிழங்கு இது. இதில் நிறைய பீட்டா கரோட்டின் என்ற நிறமி உள்ளது.இது நுரையீரல் .மார்பு,இரைப்பை மற்றும் குடல் புற்றுநோயைத்தடுக்க வல்லது.



திராட்சை,ஆரஞ்சு,ப்ரக்கோலி
மேலே கூறிய மூன்று பொருட்களிலும் விட்டமின் சி நிறைய உள்ளது. இவைகல் புற்றைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மைசெய்கின்றன


.
வேர்க்கடலை:
இதில் உள்ள விட்டமின் இ - கல்லீரல்,பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றைத்தடுக்கவல்லது.(கடலை நல்ல்ு)

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா வலைத்தளம்

New blog

Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org