Wednesday, 21 November 2012

க்ரீன் டீயின் நன்மைகள் (GreenTea -Health Benefits)

கிரீன் டீயின் நன்மைகள்........

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

* இதய நோய் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது.

* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

நன்றி : மாலைமலர்

Wednesday, 1 August 2012

பதின்பருவ ஆலோசனை -சில ட்விட்டுகள் (Adolescent Care)

The definition of a child is 0-18 years #WHO n UN convention

• India has d largest number of adolescents in the world ; about 20% of our population belongs to age group 10-18 years

•பெண் குழந்தைகள் 10 வயதிற்கு முன்பு பருவம் அடைந்தாலோ ,16 வயது ஆனபின்பும் பருவம் அடையாதிருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்
• ஆண் :10 வயதிற்கு முன்னர் மீசை முளைத்தால் /16 வயது ஆன பின்பும்ஆண் உறுப்பு வளர்ச்சி இல்லாமல் இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்

•18 வயதிற்கு முன்பு கர்ப்பம் தரித்தால் சிக்கல்களினால் இறக்கும் வாய்ப்பு 25 மடங்கு அதிகம்

• கருப்பை வாய் புற்று (cervical cancer) தடுப்பூசி 10-26 வயது பெண்களுக்கு போடுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம்

#BreakFastMantra காலை உணவு = மூளை உணவு # பதின்பருவத்தினர் தவிர்க்கக் கூடாது

• 8 மணிநேர உறக்கம், 8 டம்ளர் தண்ணீர் பதின்பருவ குழந்தைகளுக்கு தினமும் அவசியம்

• டைஃபாய்ட் (குடற்காய்ச்சல்) தடுப்பூசி 2 வயதில் ஆரம்பிக்கவேண்டும் ; 3 வருடங்களுக்கு ஒருமுறை பூஸ்டர் டோஸ் போடவேண்டும்

•குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லாதீர்கள் ;வாழ்ந்து காட்டுங்கள்

பதின்பருவ தடுப்பூசிகள்

Wednesday, 30 May 2012

பு(ப)கையை வெல்வோம்

1987 ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மே 31 தேதி புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புகையிலை பல நூற்றாண்டுகளாகவே பழக்கத்தில் இருந்த போதிலும் அதன் பக்கவிளைவுகள் குறித்து மக்கள் அறியாதிருந்தனர்.

1920 ல் ஜெர்மானிய அறிஞர்கள் புகையிலைக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை கண்டறிந்தனர்.அதன் பிறகே உலகநாடுகள் பலவும் விழித்தெழுந்து ஆராய்ச்சி செய்து பல நோய்களுக்கு புகையிலையும் ஒரு காரணம் என கண்டறிந்தனர்.

புகையிலையில் உள்ள நச்சுப்பொருட்கள் இருதயத்தையும் நுரையீரலையும் நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டவை

புகைப்பதால் வரும் நோய்கள்
மாரடைப்பு
பக்கவாதம்
நாள்பட்ட சளி(copd)
தொண்டைபுற்று
வாய்ப்புற்று
கணையசுரப்பிபுற்று
சிறுநீர்ப்பைபுற்று
குடல் புண்
மனஅழுத்தம்

புகையிலை ப்பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் நமது நரம்பு மண்டலத்தை நேரடியாக தூண்டி dopamine ,endorphin போன்ற பொருட்களை சுரக்கச்செய்து ஒருவித போதையை ஏற்படுத்துகின்றன மேலும் நம்மை அதற்கு அடிமைப்படுத்துகின்றன. எனவேதான் புகைப்பதை நிறுத்துவது கடினமாகிறது.

புகைத்தல் குடியைவிட அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லது.

தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் புகையை வெல்ல மே31 ல் உறுதியேற்போம்

Flower in a ash tray is the symbol for world No tobacco Day

Thursday, 10 May 2012

ஆஸ்ப்ரின் என்னும் அருமருந்து:

ஆஸ்ப்ரின் என்னும் அருமருந்து:
அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட் எனப்படும் ஆஸ்ப்ரின் 1890 ல் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 100 வருடங்களுக்கு மேலாக மருத்துவத்துறையில் பயன்பட்டு வருகிறது.
ஆஸ்ப்ரின் என்ற ப்ராண்ட் பேரே பொதுவாக வழங்கப்படுகிறது (xerox company போல)

நூறு ஆண்டுகள் ஆனாலும் இன்றும் வருடத்திற்கு 40,000 டன் ஆஸ்ப்ரின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருவதே அதன் சிறப்பைக்காட்டக்கூடியதாக உள்ளது.

ஆரம்பத்தில் ஆஸ்ப்ரின் காய்ச்சல் ,தலைவலி, உடல்வலி ஆகியவற்றிக்கே பெரும்பாலும் பயன்பட்டது.ஆனால் நாளடைவில் பாரசிட்டமால் கண்டுபிடிக்கப்பட்டபிறகு அதன் பயன்பாடு குறைந்தது. ஏனெனில் ஆஸ்ப்ரின் இரத்தம் உறைவதை தடுத்துநிறுத்தும் தன்மையுடையது ;குடல் மற்றும் இரப்பையில் புண்களை ஏற்படுத்தும்

ஆஸ்ப்ரினை குழந்தைகளுக்கு கொடுத்தால் Reye s syndrome என்ற நோய்வருவதால் 15 வயதுக்கு கீழ் தவிர்ப்பது நல்லது

பெரியவர்களும் chickenpox மற்றும் flu காய்ச்சல் உள்ளபோது தவிர்ப்பது நலம்

ஆஸ்ப்ரினின் இந்த இரத்தம் உறைவதைத் தடுக்கும் தன்மையை மருத்துவவுலகம் தனக்கு சாதகமாகப்பயன்படுத்த துவங்கியதில் இருந்து மாரடைப்பினால் வரும் பாதிப்புகளும் இறப்புகளும் பெருமளவு குறைந்து மீண்டும் ஆஸ்ப்ரின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது

ஆஸ்ப்ரின் இருவழிகளில் தரலாம்
1:) தினமும் 75 மிகி ஒரு வேளை ;இது ஏற்கனவே இரத்தக்கொதிப்பு மற்றும் சிறிய அளவில் இருதயக்குறைபாடுள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது
2:) 150-300 மிகி ஒரே டோஸ் ;இது ஏற்கனவே ஆஸ்ப்ரின் சாப்பிடாத ஆனால் மாரடைப்பின் அறிகுறிகள் ஒன்றோ அதற்கு மேலோ தெரியும்போது முதலுதவியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.பின் உடனடியாக மருத்துவரை நாடி ECG எடுத்து தொடர்மருத்துவம் செய்யவேண்டும்

Tuesday, 8 May 2012

மாம்பழத்தின் மகிமை

சங்ககாலம் தொட்டே சிறப்பு பெற்ற முக்கனிகளில் ஒன்று மாம்பழம் . இந்திய மாம்பழங்கள் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவை. மாங்கா என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே mango வும் மாம்பழம் என்ற சொல்லில் இருந்து ஆம் என்ற ஹிந்தி சொல்லும் தோன்றியிருக்கலாம்
இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் உடலுக்கு நன்மை செய்பவை

மாம்பழத்தில் விட்டமின் A மற்றும் beta-carotene,alpha-carotene,beta-cryptoxanthin ஆகிய சத்துக்கள் நிறைய உள்ளது.இவைகள் கண் பார்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் உதவும்.
மற்ற பழங்களில் உள்ளது போலவே மாம்பழத்திலும் பொட்டாசியம் (potassium) தாதுப்பொருள் நிறைய உள்ளது .இது இருதயத்திற்கு நல்லது.

மேலும் விட்டமின் B6 (pyridoxine) ,விட்டமின் c , விட்டமின் E போன்ற உயிர்சத்துக்களும் உள்ளது

விட்டமின் B6 நரம்பு மண்டல GABA எனப்படும் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானது. மேலும் இது பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது

விட்டமின் C கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்புக்கு உதவுவதோடு சிறந்த Anti-oxidant ஆக செயல்பட்டு உடலில் நுழையும் free radical எனப்படும் கலகக்காரணிகளை கட்டுப்படுத்தும்
விட்டமின் E வும் free radical ஐ கட்டுப்படுத்தும்

குறிப்பு :இந்த free radical என்பவை ரவுடிகளைப்போன்றவை .நம் உடலில் புகுந்து கலகத்தையும் கலக்கத்தையும் எற்படுத்தவல்லவை.இவைகளை எதிர்த்து போராடுவன anti-oxidant எனப்படும் பொருட்கள்.
அனைத்து பழங்கள் மற்றும் பச்சைக்காய்கறிகளில் இவை அதிகம் .

உணவை அதிகமான வெப்பநிலையில் சூடுபடுத்தவோ வறுக்கவோ பொரிக்கவோ செய்யும்போது அதிலுள்ள anti-oxidant அழிந்து free radical உற்பத்தியாகின்றது.

உடலின் பல நோயகளுக்கு (புற்றுநோய்,மாரடைப்பு ,இருதய வியாதி ,இரத்தக்குழாய் குறைபாடு ,நரம்பு மண்டலக் கோளாறு ) இந்த கலகக்காரணிகளே காரணம்
(கலகக்காரணி என்றே சும்மா மொழிபெயர்த்துள்ளேன்)


மேலே சொன்ன நன்மைகள் மாம்பழத்தில் மட்டுமே கிடைக்கும் ; புட்டிகளில் அடைக்கப்பட்ட செயற்கைச்சாற்றில் அல்ல

Saturday, 5 May 2012

BMI எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கிடுவது எப்படி?

BMI எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கிடுவது எப்படி?

இதற்கு இரண்டு உடல் காரணிகள் தேவை. 1)உடல் எடை 2)உயரம்
எடையை கிலோகிராமில் எடுத்துக்கொள்ளுங்கள் ex 50 kg

உயரத்தை மீட்டரில் எடுத்துக்கொள்ளவும் ex 1.50 m

bmi= weight in kg /(height xheight )in metre

மேலே சொன்ன எடுத்துக்காட்டு அளவிற்கு bmi கணக்கிடுவோம்

bmi= 50/ (1.5x1.5)
50/2.25
22.22
bmi 22.22


Saturday, 28 April 2012

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குருவை (prickly heat)தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குருவை :

வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர்.

பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல்சூட்டைத்தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து வீங்குகிறது.இது சிறுசிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் சிவந்து காணப்படும் மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக்கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்.


தவிர்க்கும் வழிகள் : குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வைவராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம்.அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்;இரண்டுவேளை குளிப்பாட்டினால்கூட நல்லது.அப்படி முடியாவிட்டால் தண்ணீர்வைத்து துண்டுக்குளியல் செய்தால் கூட நல்லதுதான்.


சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்ககூடாது ஏனெனில் அவைகள் வியர்வைசுரப்பிகளின் துளைகளை அடைத்துவிடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம்.
மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.


எப்போது மருத்துவரை அணுகுவது?

அதிக அளவில் ஏற்பட்டு எரிச்சல் அதிகரித்தாலோ அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ மருத்துவரை உடன் உடன் அணுகவும்.

குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்

Sunday, 15 April 2012

சிக்கன்பாக்ஸ் (chickenpox) : பகுதி இரண்டு

சிக்கன்பாக்ஸ்: இது varicella zoster என்ற வைரசினால் வருவது.மூச்சுக்காற்று மற்றும் இருமல் ,தும்மல் மூலம் வேகமாக பரவும்.

குழந்தைகள் அதிகமாகக் கூடும் பள்ளி போன்ற இடங்களில் வேகமாகப்பரவும். சீசனின் போது தடுப்பூசி போடுவதால் பலனில்லை. இந்தியாப்போன்ற நாடுகளில் இதை முன் கூட்டியே இலவசமாக போடவும் வழியில்லை.விலை ரூ 1200 -1500 தோராயமாக. மேலும் தடுப்பூசி உடலில் எதிர்ப்புசக்தியை உருவாக்க 2 முதல் 4 வாரங்கள் ஆகும்.எனவே வீட்டிலோ அல்லது அருகாமையிலோ யாருக்கேனும் அம்மை வந்தபிறகு மற்றவர்களுக்குப் போட்டு பலனில்லை.


வந்தபின் என்ன செய்வது?

முதலில் காய்ச்சல் வந்தபின் அம்மைக்கொப்புளங்கள் தோன்றும் .முதல் கொப்புளம் தெரிந்தவுடனே வைரஸ் எதிர்ப்பு மருந்தான ACYCLOVIR என்ற மருந்தை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடவேண்டும்.இது மிகமுக்கியம். தாமதமாக ஆரம்பித்தால் பலனில்லை.

குழந்தைகளைவிட பெரியவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமென்பதால் உடனே ஆரம்பிக்கவேண்டும்.

தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம் தப்பில்லை.கடைசி கொப்புளம் ஆறும்வரை கிருமிகள் மற்றவர்களுக்கு பரவவாய்ப்புண்டு.எனவெ கவனமுடன் இருக்கவும்.

அதிகமான அளவில் நீர் அருந்தவும்,பழச்சாறு,சூப் எடுத்துக்கொள்ளவும்.

உடலில் அரிப்பு பொதுவாக ஏற்படும்.அதற்கு calamine lotion பயன்படுத்தவும். காய்ச்சலுக்கு சாதாரண பாரசிட்டமால் மட்டும் பயன்படுத்தவும்.ஆஸ்ப்ரின் மாத்திரையை முற்றிலும் தவிர்க்கவும் .


Published with Blogger-droid v2.0.4

Friday, 6 April 2012

நாய் வளர்க்கும் முன்:நில் ,கவனி,லொல்

நாய் வளர்ப்பவர்களின் கனிவான கவனத்திற்கு:

நாயைப்போல் நல்ல நண்பன் கிடைப்பது அரிது.ஆனால் நாய்க்கு வெறிநோய் வந்தாலோ அதன்மூலம் நமக்கு வந்தாலோ பிழைப்பது மிக மிக அரிது. எனவே தடுப்பூசி போடாமல் நெருங்கி பழகாதீர்கள்.நாய்க்குட்டியிண் மூன்றாவது மாதத்தில்

முதல் ஊசியும், பின்னர்

வருடத்துக்கு ஒரு முறையும்

தடுப்பூசி போடவேண்டும்.

ரேபிஸ் எனப்படும்

வெறிநோயானது தெருநாய்களிடம்

இருந்தே வீட்டில் வளர்க்கும்

நாய்களுக்குப் பரவும். எனவே,

தெருநாய்களிடம் வீட்டில்

உள்ள நாய்களைப்

பழகவிடாமல்

பார்த்துக்கொள்வது நல்லது.


Published with Blogger-droid v2.0.4

Wednesday, 4 April 2012

கேள்வி/பதில்

கேள்வி: தாய்க்கு இரத்தப்பிரிவு நெகடிவ் எனில் என்ன முன்னெச்சரிக்கை தேவை ?


பதில்:தாய்க்கு நெகடிவ் பிரிவும் குழந்தைக்கு பாசிடிவ் பிரிவும் இருக்கும்போது முதல் குழந்தைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. குழந்தை பிறக்கும்போது குழந்தையின் பாசிடிவ் ரத்தம் தாயின் உடலில் கலக்கும் போது எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகும். இது அடுத்து பிறக்கும் குழந்தையைத் தான் பாதிக்கும்.


இதற்கு RH incompatibility என்று பெயர்.


இதைத் தடுக்க முதல் குழந்தை பிறந்தவுடன் anti-D தடுப்பூசி போடவேண்டும்.


தாய்க்கும் குழந்தைக்கும் நெகடிவ் பிரிவு என்றால் எந்த பயமும் இல்லை.


Published with Blogger-droid v2.0.4

Tuesday, 3 April 2012

குழந்தை வளர்ப்பு/வார்ப்பு எது முக்கியம்?

குழந்தை வளர்ப்பு/வார்ப்பு எது நிஜம்?

ஒரு குழந்தையின் குணத்தை இரு காரணிகள் தீர்மானிக்கின்றன.

NATURE: (வார்ப்பு) இது மரபணு மூலமாக பெற்றோரிடமிருந்து வருவது.இதை மாற்றுவது கடினம்.அதாவது ஜீன் தெரபி எனப்படும் முறையால் சிரமப்பட்டு மாற்றவழி கண்டுபிடித்துள்ளனர்.

NURTURE:(வளர்ப்பு) இது எல்லாருக்கும் தெரிந்ததுதான்."நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"

nature ஐ ஒரளவும் nurture ஐ முழுதும் கட்டுப்படுத்தலாம்.


கரு வளரும்போது தாய்க்கு ஏற்படும் மனஉளைச்சல் குழந்தையை பாதிக்கலாம்.அந்த நேரத்தில் சரியாக சாப்பிடாது இருத்தல்,அலைச்சல், புகைப்பிடித்தல்,போதைப்பொருள் பயன்படுத்துதல், ஃபோலிக் ஆசிட் விட்டமின் குறைபாடு போன்றவை குழந்தையின் மூளைத்திறனை நேரடியாக பாதிக்கும். பதின்பருவ கர்ப்பம் -(teenage pregnancy) , TORCH infection போன்றவையும் கருவை நேரடியாக பாதிக்கும்.

எனவே நல்ல பெற்றோரிடம் பெரும்பாலும் நல்ல குழந்தை மட்டும்தான் பிறக்கும் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

வளர்ப்பினால் எல்லா குழந்தைகளையும் நல்லவனாகவும்,வல்லவனாகவும் மாற்றமுடியும் .


Published with Blogger-droid v2.0.4

Monday, 2 April 2012

குழந்தைகளுக்கு தீக்காயம் பட்டால் என்ன செய்யவேண்டும்?

குழந்தைகளுக்கு தீக்காயம் பட்டால்:

பதட்டம் அடையாதிர்கள்.முதலில் ஆடைகளை கழற்றிவிடுங்கள் .தீ பட்ட இடத்தில் 5 நிமிடங்கள் வரை சாதாரண வெப்பநிலை உடைய சுத்தமான நீரை ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . தீக்காயத்தில் இங்க் ,சொட்டு நீலம் போன்றவற்றை போடக்கூடாது.

ஐஸ் தண்ணீர் போடக்கூடாது.

சிறிய காயத்திற்கு SILVEREX என்ற களிம்பு போட்டால் போதும்.

பெரிய காயமெனில் முதலுதவிக்குப் பிறகு மருத்துவரை அணுகவும்


Published with Blogger-droid v2.0.4

Sunday, 1 April 2012

முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்?இரண்டு காரணங்களுக்காக :

1. பச்சை முட்டையில் avidin என்ற

வேதிப்பொருள் உள்ளது.நாம்

அப்படியே குடிக்கும்போது அது குடலில்

சென்று biotin என்ற விட்டமின்

சத்தை உறிஞ்ச விடாமல்

செய்கிறது.தொடர்ந்து பச்சை முட்டை

சாப்பிட்டுவந்தால் கடும் பயோட்டின்

குறைபாடு ஏற்படும்

2.முட்டையின் ஓடு மெல்லியது.அதில்

சிறுசிறு கண்ணுக்குத் தெரியாத

துவாரங்கள் இருக்கும்.வெளி ஓட்டில்

உள்ள கோழியின் கிருமிகள்

உள்செல்வது எளிது.மேலும் நீண்ட

தொலைவுகள்

இது எடுத்துச்செல்லப்படும்போது

அதிர்வுகள் மூலம் கண்ணுக்குத்தெரியாத

சிறு கீறல் விழும்.இதன் மூலமும் சால்மோனெல்லா, பறவைக்காய்ச்சல்

கிருமிகள் எளிதில் பரவும்.

மேலும் முட்டையானது கிருமிகள் வளர

ஒரு அருமையான ஊடகம் (good culture media).

எனவே எல்லா வயதினரும் எப்போதும்

முட்டையை வேகவைத்தோ

வறுத்தோதான் சாப்பிடவேண்டும்.

ஆஃப் பாயிலில் ஆஃப் ரிஸ்க் உள்ளதுPublished with Blogger-droid v2.0.4

Thursday, 9 February 2012

chickenpox அம்மை குறித்த தகவல்கள் !!

ட்விட்டரில் எழுதியவை:


chickenpox அம்மை என்பது varicella zoster என்ற வைரசினால் வருவது; இறைநம்பிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை         


சிக்கன்பாக்ஸ் ஒருமுறை வந்தால் மீண்டும் வர வாய்ப்பு மிக மிக குறைவு (life long immunity)   


10,12 படிக்கும் மாணவர்களுக்கு சிக்கன்பாக்ஸ் தடுப்புசி போட்டுக்கொண்டால் தேர்வு நேரங்களில் அம்மை பயம் தேவையில்லை ! 


சிக்கன் பாக்ஸ் எனப்படும் அம்மையின் முதல் கொப்புளம் வந்தவுடனே மருத்துவரை அணுகவும்;குணமாக்க  ACYCLOVIR என்ற மருந்து உண்டு.


  குழந்தைகளைவிட 20 வயதை தாண்டிய பெரியவர்களுக்கு சிக்கன்பாக்ஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் ;உடனடி சிகிச்சை அவசியம் 


Published with Blogger-droid v2.0.4

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...