Thursday, 26 August 2010

உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க :

உங்கள் குழந்தையின்  உயரத்தை கணிக்க :

வளர்ந்த பின் உங்கள் குழந்தை  எவ்வளவு  உயரம் இருக்கும் என்பதை  சில முறைகள் மூலம்  முன் கூட்டியே சொல்லமுடியும் ,



பெண் குழந்தை ஒன்றரை  வயதில் உள்ள உயரத்தை போல்  இரு மடங்காகும்



ஆண் குழந்தை  இரண்டு வயதில்  உள்ள உயரத்தை  போல் இரு மடங்காகும்
                                                   (அல்லது)

மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .57  என்ற  எண்ணால்  பெருக்கினால் வரும் .


                                        (அல்லது  )



weech  formula :
    predicting adult height(male)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +38 cms

     predicting adult height(female)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +26 cms



midparental height   என்பது பெற்றோரின்  சராசரி  உயரம் ( அப்பா 160 , அம்மா  140  எனில் mph  150  ஆகும் )



உங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே  அதன் வரும்கால  உயரத்தை  கணக்கிடமுடியும் .

Tuesday, 24 August 2010

குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?

 குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
(EYE  DISCHARGE DUE TO NASOLACRIMAL DUCT OBSTRUCTION)


பிறந்த குழந்தை , ஒரு வயதிற்கு  குறைவான  குழந்தைகளுக்கு  கண் பொங்குதல்  என்பது  அடிக்கடி வரும் ஒரு நிலை . சூட்டினால்  இது வருகிறது  என்று  தேவை இல்லாத  சில வைத்திய  முறைகளை  பெற்றோர்  செய்வார்கள் ( தாய்ப்பால்  கண்ணில்  விடுவது , எண்ணெய் தேய்த்து  குளிபாட்டுவது)


ஆனால்  இதற்க்கான  காரணம் NLD (NASOLACRIMAL  DUCT  OBSTRUCTION )  எனப்படும்  அடைப்பு ஆகும் .


சாதரணமாக நம் எல்லோருக்கும்   கண்ணுக்கும்  மூக்கிற்கும்  ஒரு இணைப்பு  உள்ளது . கண்ணீர் இதன் வழியே  மூக்கின்  உள்ளே  வடிந்துவிடும் . பிறந்த  குழந்தைக்கு  இந்த இணைப்பு  சரியாக  வளர்ச்சி அடையாமல் இருந்தாலோ , அடைப்பு ஏற்பட்டு இருந்தாலோ  கண்ணில் நீர்  வடிவத்துடன்   இமைகள் பிரிக்கமுடியாமல்  மூடவும்  வாய்ப்பு உண்டு .





  மருத்துவம் :  NLD  MASSAGING :


    மசாஜ்  செய்வதன் மூலம்  இதனை  சரி செய்யலாம் . ஒரு நாளைக்கு  ஆறு முதல் எட்டு  தடவை  C வடிவத்தில்  கண்ணிற்கும்  மூக்குக்கும்  இடையே  மசாஜ்  செய்யவேண்டும் .


மருத்துவர் ஆலோசனை படி கண் சொட்டு மருந்து  போட்டு வரவேண்டும் .
தாய்ப்பால்  போடுதல் , எண்ணெய் தேய்த்து  குளிப்பாட்டுதல் கூடாது 


.

Sunday, 22 August 2010

குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் :

EPISTAXIS  IN CHILDREN : 
குழந்தைகள்  மூக்கில்  ரத்தம் வடிதல் :
         மூக்கில் ரத்தம் வடிவது  பொதுவாக  காணப்படும்  ஒரு  நிலை , ஆனால் பெற்றோரை   மிகவும் பயமுறுத்தும்  , ஆனால்  ஆபத்து  அற்ற  நிலை .


காரணங்கள் :

மூக்கை  நோண்டுதல் , கிள்ளி கொண்டே  இருத்தல்

 அடி படுதல்

ரத்தம்  உரையாத  தன்மை (haemophilia )

உலர்வான  சீதோஷ்ண  நிலைமை (winter )

 ADENOID  எனப்படும்  தொண்டை கட்டி

  அலர்ஜி

 SINUSITIS  சைனுசிடிஸ்

 குடும்ப வரலாறு
 
மருத்துவம் :

   பதட்டம்  அடைய  கூடாது


   மூக்கை சிந்தவே  கூடாது , அப்படி செய்தால்      ரத்தபோக்கு  அதிகரிக்குமே  தவிர  குறையாது


குழந்தையை  முன் புறமாக  சாய வைத்துகொள்ளுங்கள்


மூக்கை கட்டை விரல்  மற்றும்  ஆள் காட்டி விரலால்  நன்கு அழுத்தி  பிடிக்கவும் , இப்படி  பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .


 மூக்கு உலராமல் இருக்க  வாசலின் ஜெல் , சலைன்  சொட்டு  மருந்து இரவில் போட்டுவிடலாம் .




அடிக்கடி  ரத்தம் வந்தால் , மருத்துவரை  அணுகி  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...