Saturday, 2 October 2010

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :(MADRAS EYE- CONJUNCTIVITIS-FACTS& PREVENTION)

மெட்ராஸ் ஐ - குறித்த  உண்மைகள் :


கண்களின்  வெளி சவ்வு  அழற்சியே  - சிவந்த  கண் அல்லது  மெட்ராஸ் ஐ  எனபடுகிறது .அடினோ  வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு  பெரும்பாலும் காரணம் .இது பருவநிலை  மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான  , ஈரபதமான சூழ்நிலையில்  மிக வேகமாக  பரவக்கூடியது .

இது காற்று  மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர்  ) கை குலுக்குதல்  மூலம் பரவும்  ஒரு வைரஸ்  வியாதி  ஆகும் .

கருப்பு  கண்ணாடி போடுவதால்  பிறருக்கு  பரவாது என்பது  தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான  சூரிய வெளிச்சம் மூலம்  வரும்  எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .

ஒருவர் பயன்படுத்திய  கண்ணாடியை  மற்றவர் பயன் படுத்த கூடாது

கண் சொட்டு  மருந்தை  ஒரு நாளைக்கு  ஆறு முதல்  எட்டு  முறை  மருத்துவர் ஆலோசனை படி  போடவேண்டும் .


கண்களை கசக்க  கூடாது .


தும்மல் , இருமல் மூலமும் இந்த  வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி  வைத்து இருமவும் .


கண்களை  குளிர்ந்த நீரில்  அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை  நன்கு சோப்பு போட்டு  கழுவவும் .


மிதமான  வெந்நீரில்  துண்டை  நனைத்து  ஒத்தடம் கொடுக்கவும் .நேருக்கு  நேர் பார்த்தால்  வராது . ஆனால்  எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும்   , குழந்தைகளுக்கும்   அருகில் வந்தாலே மூச்சு  காற்று மூலம்  தொற்று  ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி  steroid  சொட்டு  மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே  சுய  மருத்துவம்  செய்வதற்கு  சும்மா இருப்பதே மேல் . ஏனெனில்  இது தானாகவே  சரி ஆகிவிடும்  (self limiting ).


உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5  முதல் 7  நாட்களில்  இது குணமடையும் .

பின் இணைப்பு :

Sunday, 26 September 2010

டாப் 10 சோர்வடைய காரணங்கள் :

                                       டாப் 10 சோர்வடைய  காரணங்கள் :


  
1 . தூக்கம் இன்மை :INSOMNIA
              குழந்தைகளுக்கு  எட்டு முதல்  பத்து  மணி நேரமும் , பெரியவர்களுக்கு  ஆறு முதல்  எட்டு  மணி நேர துக்கம் அவசியம்  .


2 .தூக்கத்தில் மூச்சுவிட  மறத்தல் : SLEEP APNEA- இந்த  நிலை  மிகவும் குண்டான , புகை பழக்கம் உள்ளவர்களுக்கு  வரும் . உறக்கத்தில்  அடிக்கடி மூச்சு  நின்று நின்று வருவதால்  இவர்கள்  நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள் .எட்டு  மணி நேரம்  தூங்கினாலும்  இரண்டு     மணி     நேரம் தூங்கிய  உணர்வே இருக்கும் .

              மருத்துவம் ; எடை  குறைப்பு , புகைப்பதை  நிறுத்துதல்


3 .மாறுபட்ட உணவு :    காலை உணவு சாப்பிடாமல்  இருத்தல் , சரிவிகித  உணவு உண்ணாமை , நேரம் தவறி சாப்பிடுதல் , அதிகபடியான  அசைவ உணவு , உணவு அலர்ஜி-
              மருத்துவம் : கட்டாய  காலை உணவு , பழங்கள் , அளவுடன் அசைவம் , அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.


4 . ரத்த சோகை : பெண்களுக்கு , குழந்தைகளின்   சோர்வுக்கு  மிக முக்கிய காரணம் . மருத்துவம் : இரும்பு
சத்துமிக்க உணவுகள் : கல்லீரல் , கடலை முட்டாய், ..5 .மன அழுத்தம் :  வெளியே தெரியாத  மன  அழுத்தமே  பெரும்பாலான  சோர்வுக்கு  காரணம் 
                 மருத்துவம் :  நடை பயிற்சி , யோகா 


6 .THYROID  HORMONE  குறைபாடு ;
           வெளியே தெரியாத ஹோர்மோன்  குறைபாடு ஒரு காரணம். 
                  மருத்துவம் : பரிசோதனை  செய்து  பின் ஹோர்மோனை  ஈடு செய்தல்.7 . KAFFEINE  OVERLOAD :கொஞ்சம்  கொஞ்சமாக  நெறைய  தடவை குடிக்கும்  காபி டி  போன்றவை  முதலில்  ஒரு தற்காலிக  உற்சாகம் தந்து பின்  இறுதியில்  சோர்வையே தரும் .


8 . நீரிழிவு  நோய் :   35  வயதை  கடந்தாலே  இதுவும்  ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்
          வெறும் வயிற்றில்  110  MG , சாப்பிட்டவுடன்  160  MG  கீழே  இருக்கவேண்டும் .

9 . சிறு நீர்  தொற்று :

             பெண்கள் ,சிறு குழந்தைகள் - வெளியே  தெரியாத  தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம்
         மருத்துவம் : அதிகம் தண்ணீர்  குடிக்கவும் , நீரை  அடக்கிவைக்க கூடாது .


10 .உடலில்  நீர்,உப்பு  பற்றாகுறை( DEHYDRATION )   
             போதிய அளவில்  நீர் குடிக்காமல் இருப்பது  மற்றும்  வியர்வையில்  நீர் ,உப்பு இழப்பு  . 
              மருத்துவம் : ஒரு நாளைக்கு  3  லிட்ர் நீர் அருந்துதல் ,  

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...