Me

My photo

i am a consultant pediatrician

Wednesday, 22 September 2010

குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :



குழந்தைகளுக்கு  வரும் ஆஸ்த்மா :

(asthma is a Greek word that is derived from the verb aazein, meaning to exhale with open mouth, to pant. The expression asthma )

ஆஸ்த்மா  என்பது  அலர்ஜியினால்   வரும் ஒரு  நாள்பட்ட  சுவாச மண்டல  கோளறு ஆகும் .
இது நாள்பட்ட கோளறு ஆகும் . எனவே  பொறுமை  அவசியம் .

காரணங்கள் :

      பரம்பரை  ஜீன்கள்
      சுற்று சூழல்


நடப்பது என்ன ?

     உணவிலும் , காற்றிலும்  உள்ள  அலர்ஜி உண்டாக்கும்  பொருள்கள்  உடலில் சென்ற வுடன்  நமது  நுரையீரலின்  உள்ளே உள்ள  சிறு சிறு  காற்று குழாய்கள் சுருங்க  ஆரம்பிக்கும் . ஆரம்பத்தில்  இந்த நிலை  தற்காலிகமானது , ஆனால் போக போக  இதனால்  காற்று குழாய்கள் சுருங்கி  மூச்சு விட  சிரமம் ஏற்படும் . இது ஒருவித  சத்தத்தை  உண்டாக்கும் -(வீசிங்  )

அறிகுறிகள் :

  தொடர்ச்சியான இருமல்


மூச்சை வெளிவிடும்போது  வீசிங் - அதாவது  விசில்  ஓலி

நெஞ்சை  அடைப்பது போன்ற  இறுக்கம்

மூச்சு விட சிரமம்


சோர்வடைதல்

பேச முடியாமல்  மூச்சு வாங்குதல்


ஆஸ்த்மாவை  தூண்டுபவைகள் :

ஒவ்வாமை  பொருள்கள் : பூனை , நாய் போன்ற பிராணிகளின்  முடி , கரப்பான் பூச்சியின் எச்சம், டஸ்ட்  மைட், பூக்களின்  மகரந்தம் , புற்களின் பூக்கள்

டஸ்ட் மைட் - கண்ணுக்கு தெரியாமல் தலையணை  போர்வை  முதலியவற்றில்   இருக்கும் . இதன்  எச்சத்தினால் அடிக்கடி  ஒவ்வாமை வரும் . ஒரு தலையணையில்  ஒரு கோடி  என்ற  அளவில் கூட  இவை இருக்கும் . டஸ்ட் மைட்  அலர்ஜி  அல்ல , ஆனால் அதன்  மலம் - ஒரு நாளைக்கு  குறைந்தது  20  முறை போகும் - அலர்ஜியை  ஏற்படுத்தும் .

டஸ்ட் மைடின் கழிவு  பொருள்


டஸ்ட்  மைட்

  













வாகன  புகை மற்றும்  சிகரட்  புகை 
 
உடலுக்கு போடும்  சென்ட் , பாடி ஸ்ப்ரே

குளிர்ந்த காற்று

உடற்பயிற்சி , அதிகபடியான வேலை

மன  அழுத்தம்(படிப்பு ,வீட்டு பாடம்) , அதிகபடியான  சிரிப்பு கூட
 தடுப்பு முறைகள் & மருத்துவம் : அடுத்த பதிவில் ...