Tuesday, 22 June 2010

விமானத்தில் போகும் குழந்தைகள்

விமானத்தில் பயணம் செய்யும்போது வளிமண்டல காற்றழுத்த மாறுபாட்டினால்காது வலி வரலாம் .

முன் எச்சரிக்கை நடவடிக்கை :

சளி உள்ள குழந்தைகளுக்கு இரண்டு நாள் முன்னதாகவே இருந்து இருமல் மருந்து , மூக்கு சொட்டு மருந்து கொடுத்து வர வேண்டும் .

TAKE OFF & LANDING போது குழந்தைக்கு சூப்பான், CHEWING GUM, SWEET முதலிய எதாவது கொடுத்தால்காது ஜவ்வு அடைப்பு ஏற்படாமல் தடுத்து , வலி வராமல் தடுக்கலாம் .

முக்கியமாக குழந்தை துங்காமல் இருப்பதுஅவசியம் .

காதில்பஞ்சு வைத்து அடைப்பத்தின் மூலம் வளி அழுத்தமாறுபாட்டினால் வலி வருவதை குறைக்கலாம் .

Sunday, 20 June 2010

விரல் சப்பும் குழந்தை -THUMB SUCKING

    விரல்  சூப்பும்  பழக்கம்   கருவில் உள்ள போதே   ஆரம்பித்துவிடும் .  நான்கு வயது வரை   இது குறித்து  கவலை  பட  தேவை இல்லை .  ஆதற்கு பிறகும்  இந்த பழக்கம்  இருந்தால்  குழந்தை  பாதுகாப்பில்லாமல் ஒரு  பயந்த  நிலையில் உள்ளது என்று  பொருள் . குழந்தையின் கவனத்தை திசை  திருப்புவதின்  மூலமும், அதனோடு  நேரத்தை  செலவிடுவதின்  மூலமும்   இந்த பழக்கத்தை  ஓரளவு குறைக்க முடியும் .

தீய விளைவுகள்:

பல்லின்  அமைப்பு  மாறுவது
விரலில்   நோய் தோற்று  ஏற்படலாம்
விரலில் உள்ள கிருமிகள்   வயிற்றுக்குள் செல்வதால்  அடிக்கடி  வயிற்று வலி , வயிற்று போக்கு ஏற்படலாம்.

pacifier - சூப்பான் தேவையா?

PACIFIER எனப்படும்    சூப்பான் உபயோக  படுத்தினால்  மட்டுமே சில குழந்தைகள்  அழாமல் இருக்கும் . விரல் சூப்புதல்  என்பது  குழந்தை வயிற்றில்  இருக்கும் போதே  ஆரம்பிக்கும் பழக்கம் . சப்புதல்  குழந்தைக்கு  ஒரு  மன  அமைதியை  தருகிறது . ஆனால்  விரல் சப்புவதால்  சில தீங்குகள்  வரலாம் , அப்பொழுது  PACIFIER எனப்படும் சூப்பான்களை  உபயோகிக்கலாம் .

சில கருத்துக்கள் :
பசியால்  அழும்  போது    சூப்பான் உபயோகிக்க கூடாது . எதனால் குழந்தை  அழுகிறது என்று  பார்த்து  அதை சரி  செய்யவேண்டும் .

தொடர்ந்து  உபயோகிக்க கூடாது . இதனால்   பற்களின்  அமைப்பு  மாற வாய்ப்பு உள்ளது .

சூப்பான்களை  சுத்தமாக  வைத்துக்கொண்டால்   நோய்  தொற்று வராமல் தடுக்கலாம்

     எடை குறைவான  குழந்தைகள் , நோயுற்ற  குழந்தைகள்   PACIFER உபயோகிப்பதால்  உடல் நிலையில் நல்ல    முன்னேற்றம்   காணப்படும் .

    SIDS(SUDDEN INFANT DEATH SYNDROME)  எனப்படும்   நிலையில் சில  குழந்தைகள்  தூக்கத்தில் காரணம் இதுவென்று  தெரியாமல்  இறக்கும் . சூப்பான்  உபயோகித்தால்  SIDS வராமல் தவிர்க்கலாம் .

baby walkers உபயோக படுத்தலாமா? கூடாதா?

BABY WALKERS  எனப்படும்  நடை பயிற்சி  கருவியை  உபயோக  படுத்துவதால்  மட்டும்  குழந்தை  சீக்கிரம்  நடக்கும் என்று சொல்லி விட முடியாது . குழந்தையின்  வயதிற்கு  ஏற்பவே  நடக்கும் .

        ஆனால்  BABY WALKER  உபயோக  படுத்தினால்  குழந்தைக்கு கால்  வலி வர வாய்ப்பு   உள்ளது , ஏனெனில்  வாகேரில்  அது  அளவுக்கு  அதிகமாக  நடக்க  முயற்சி  செய்யும் . மேலும்  மிக வேகமாக  நகர்வதால்  (ஒரு வினாடிக்கு  மூன்று அடி )  அடி பட வாய்ப்பு உள்ளது .
INJURIES:
எலும்பு  முறிவு , தலையில்  பலத்த காயம்  ஏற்பட வாய்ப்பு உள்ளது

கழிவுஅறை, நீச்சல்  குளம் , போன்ற  இடங்களுக்கு  சென்று  நீரில் மூழ்க  வாய்ப்பு உள்ளது

கால் விரல் , குதி காலில் காயமும் , எலும்பு முறிவும் ஏற்பட  வாய்ப்பு  உள்ளது .


எனவே  BABY WALKER முடிந்த வரை  தவிர்ப்பது  நல்லது .

விடாமல் அழும் குழந்தை

குழந்தைகள் சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் கீழே :

வயிற்று வலி :(COLIC): இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும் . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு சிறிது ஊப்பிஇருக்கும் . பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும் .
முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு இது அதிகமாக காணப்படும் .
அழும் போது குழந்தயை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும் .(drugs- colimex drops, cyclopam drops, coicaid drops, anafortan drops)

காது வலி : இதுவும் மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் தருவது , சளி , மூக்கு அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகி அழும் . (drugs- otogesic drops, ciplox drops, candibiotic drops)
மூக்கு அடைப்பு : படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும் . (treatment-nasoclear drops, nasion drops, otrivin drops)

பூச்சி கடி : குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி, எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .

இதர காரணங்கள் :
தடுப்பூசி போட்டபின் வரும் வலி

சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்

DIAPER RASH-ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு .

இறுக்கமான உடைகள்

வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை
cont...

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...