Saturday, 19 June 2010

குழந்தைகள் தூங்கும் நேரம்
1-3 MONTHS --- 14.4 HOURS4-6 MONTHS----13.2 HOURS7-9 MONTHS---12.7 HOURS10-12 MONTHS--11.8 HOURS2-3 YEARS --12.5 HOURS4-5 YEARS --11.5 HOURS6-7 YEARS---11HOURS8-13 YEARS -- 11 HOURS -9 HOURS

குழந்தைகள் வளரும் வேகம்


எடை :
பிறக்கும் போது குழந்தையின் எடை மூன்று கிலோ சராசரியாக இருக்கும் .

முதல் வருட வளர்ச்சி ஆறு கிலோ , அதாவது ஒரு வயதில் ஒன்பது கிலோ இருக்கும்

நாலு வயது வரை வருடத்திற்கு இரண்டு கிலோவும்

அதன் பின் பருவ வயது வரை வருடத்திற்கு மூன்றுகிலோவும் கூடும் .

உயரம்

பிறக்கும் போது 50 cm இருக்கும் . முதல் வருடத்தில் 25 cm வளரும் , அதாவது முதல் வயதில் 75 cm இருக்கும் .

இரண்டாம் வருடத்தில் 12.5 cm வளர்ச்சி இருக்கும்

அதன் பிறகு பருவ வயது வரை ஒவ்வொரு வருடமும் 6 cm வளர்ச்சி இருக்கும்

CHILDHOOD OBESITY குண்டு குழந்தைகள்


BMI= WEIGHT/ (HEIGHT)2

OBESITY என்பது உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து எடை கூடுவதாகவும் .
உங்கள் குழந்தை சரியான எடையா அல்லது குண்டா என்பதை கீழே உள்ள வழியில் கண்டுபிடிக்கலாம்

BMI - BODY MASS INDEX--உயரத்திற்கு தகுந்த எடை உள்ளதா என்பதே இது .

கணக்கிடும் முறை

BMI= WEIGHT IN KILO/ HEIGHT IN METRE 2

அதாவது எடையை பார்க்கவேண்டும் , பின் உயரத்தை அளந்து அதை ஸ்கொயர் செய்துகொள்ள வேண்டும் . எடையை கீழ் உள்ளதால் வகுத்தால் வரும்


எடுத்துகாட்டாக :

எடை 50 உயரம் 150 cm( 1.50 M)
BMI= 50/ 1.5 x 1.5

=50/2.25
=22.22
எனவே மேலே உள்ள எடை, உயரம் உள்ளவருக்கு BMI 22.22


UNDER WEIGHT <19
NORMAL 19--25
OVER WEIGHT 25--30
OBESE > 30
EXTREME OBESE > 40

காரணங்கள் :

பரம்பரை காரணங்கள்

உணவு பழக்கவழக்கம்

உடற்பயிற்சி இன்மை

ஹார்மோன் கோளாறு


தடுக்கும் முறை : (தொடரும்)


Monday, 14 June 2010

ASTHMA ( மூச்சு இரைப்பு ) (கணை ) (ஆஸ்த்மா )

http://doctorrajmohan.blogspot.com/2010/09/blog-post_22.html

ADHD ( மிகை சுட்டி குழந்தைகள் )

ATTENTION DEFICIT HYPERACTIVITY DISORDER.
துரு துரு என குழந்தைகள்இருப்பது எல்லாருக்கும் பிடிக்கும் . ஆனால் ADHD குழந்தைகள் சிறிது நேரம் கூட ஓய்வு இல்லாமல் ஓடிகொண்டே இருக்கும் . மேலும் எந்த ஒரு விசயதில்லும் கவனம் செலுத்த இயலாது இருக்கும் . இது ஏழு வயதிற்கு குறைவான குழந்தைகளை அதிகம் பாதிக்கும் .


இது மூன்று வகையில் காணப்படும்
-அதிகமான துருதுருப்பு
-கவனகுறைபாடு
-இரண்டும் கலந்தது

அதிகமான துருதுருப்பு : சிறிது நேரம் கூட ஒரு இடத்தில் இருக்க முடியாது . எதாவது பொருளை எடுத்து கொண்டோ , ஓடி கொண்டோ இருக்கும் .கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆரம்பித்து விடும் .வரிசையில் காத்திருக்காது உடனே வேண்டும் என அடம் பிடிக்கும் .


அளவுக்கு அதிகமாக பேசும் . வகுப்பில் தனது இருக்கையில் இல்லாமல் வேறு எங்கோ இருக்கும் . மற்றவர் செயல்களில் குறுக்கிடும் , பேச்சை இடை மறிக்கும். இந்த ஒரு குழந்தை இருப்பது பல குழந்தைகளை பார்ப்பது போல இருக்கும் . புதிய இடம் சென்றாலும் தனது சேட்டையை தொடரும் .
கவன குறைபாடு :

....தொடரும்

மூச்சு விடாமல் அழுதல் (BREATH HOLDING SPELLS)

கோபம் ,வெறுப்பு , சிறிய காயம் , மற்றும் ஊசி போடும்போது சில குழந்தைகள் அழுது பின் மூச்சை அடக்கி சத்தம் சிறிதும் இல்லாமல் போகலாம் , இந்த நிலை சில நொடிகள் நீடிக்கும் . இதுவே BREATH HOLDING SPELLS எனப்படும் .பொதுவாக ஆறுமாதம்முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளை பாதிக்கும் .
இரு வகைகள் உள்ளன .
நீலமாக மாறுதல்
வெளிறி போகுதல்

கோபம் , வெறுப்பு ஆகிய காரணத்தினால் நீலமாகவும்
பயம் , அடிபட்ட காயம் ஆகிய காரணத்தினால் வெளிறியும் போகலாம்

முதல் முறை இப்படி வரும் போது பெற்றோர் மிகவும் பயப்படுவது இயல்பு .
சிறிது நேரம் கழித்து குழந்தை பழைய நிலையை அடையும் .

கரணங்கள்குடும்ப வரலாறு
இரும்பு சத்துகுறைபாடு
மருத்துவம்இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்ய வேண்டும்

Sunday, 13 June 2010


TEMPER TANTRUMS அடம் பிடிக்கும் குழந்தைகள்

ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் தங்களின் தேவையை சொல்ல தெரியாததினால் அழலாம் . ஆனால் நான்கு வயது தாண்டிய பிறகும் அழுதும் , மண்ணில் புரண்டும் ,எட்டி உதைத்தும் ,மூச்சை பிடித்து கொண்டு அழும் . இதுவே temper tantrum அடம் பிடிக்கும் குழந்தைகள் எனப்படும் .


HOW TO MANAGE TEMPER TANTRUM: சமாளிக்கும் விதம் :

அடம் சிறிது நேரமே இருக்கும் எனவே அவன் கவனத்தை திசை திருப்பவும்

அவனை இறுக்கமாக கட்டிபிடிகவும் . அழுகை முடியும் வரை இப்படி செய்யவும் .

கடை வீதி செல்லும் போது அவன் கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிதரகூடாது .

அவன் நல்ல செயல் செய்தல் பாராட்ட வேண்டும் . அழுது புரளும் போது முக்கியமாக எதுவும் வாங்கி தர கூடாது

PICA மண்ணை மட்டும் தின்றால்

கையில் கிடைக்கும் கல் மண் ,சுண்ணாம்பு , பெயிண்ட் தூள் ஆகிய பொருள்களை சாப்பிடுவதற்கு பைகா என்று பெயர் . ஒரு வயது முதல் இரண்டு வயது வரை புதிய பொருள்களை சுவைக்கும் ஆர்வம் இருக்கும் . இரண்டு வயதை தாண்டிய பிறகும் மேலே கூறிய பொருள்களை சாப்பிட்டால் அது தவறு .

கரணங்கள் : இரும்பு சத்து குறைபாடு

துத்தநாகம் சத்து குறைபாடு

பெற்றோரின் கவன குறைவு

மற்றும் சில மன நல குறைபாடு


மருத்துவம் :(TREATMENT OF PICA)

பெற்றோரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்

இரும்பு மற்றும் துத்தநாகம் தாதுக்களை மருத்துவரின் ஆலோசனை படி தரவேண்டும் .
FEBRILE FITS ( சுர வலிப்பு ) ( ஜுர வலிப்பு )
ஆறுமாதம்முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் தாக்கும் . சுரம் அதிக மாக வரும் போதுசில குழந்தைகள் பேச்சு மூச்சு இன்றி ,கண்கள் மேலே சொறுகி ,வாயில்நுரை தள்ளி , கை கால்கள் வெட்டி வெட்டி இழுக்கும் . இது ஐந்துமுதல் பத்துநிமிடம் வரை இருக்கும் . பின் வலிப்பு நின்றுவிடும் . சிறிது நேரம்சுய நினைவு இல்லாமல் இருக்கும் . பிறகு சாதரண நிலைக்கு வரும். இது எப்பொழுது சுரம் அதிகம் வந்தாலும் வரும் .
முதலுதவி :
பதற்றம் அடயகூடாது
காற்றோட்டம் வரும்படி குழந்தையை
வைக்கவும்
ஒருக்களித்து படுக்க வைக்கவும்
வாயில் உள்ள நுரை மற்றும் எச்சிலை துடைக்கவும்
உடைகளை அகற்றவும் .
தலை முதல் கால் வரை ஈரமான துணி கொண்டு துடைத்து விடவும் . இது மிக முக்கியம் . மீண்டும் மீண்டும் இது போல் ஜுரம் குறையும் வரை செய்யவும் .
மருந்துகள்
PARACETAMOL -ஜுரம் குறைய தரவும். (dose 15mg/kg/dose)
அதாவது பத்து கிலோ எடை உள்ள குழந்தைக்கு 150 mg தரவும் . இதை ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை தரவும் .
FRISIUM - என்ற மாத்திரை வலிப்பு மீண்டும் வராமல் தடுக்க தரலாம் .
இதை மருத்துவர் ஆலோசனை பெற்று தரவும்
DIAZEPAM SUPPOSITORY- வாய் வழியே மாத்திரை தர முடியாமல் போனால் இந்த மருந்தை ஆசனவாயில் வைத்தால் வலிப்பு வராமல் தடுக்க முடியும் .
வரும் முன் காப்பதே சிறப்பு .
எனவே சுரம் வந்தவுடன் முன் எச்சரிக்கையாக
தண்ணீர் வைத்து துடைத்து விடுவது நலம் .
இதற்கு சாதாரண குழாய் தண்ணீரை பயன் படுத்தவேண்டும் .
சுடு நீர் அல்லது குளிர் நீர் கூடாது .
வேலைக்கு செல்லும் தாய் :
தாய் பாலே குழந்தைக்கு அரு மருந்து . வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின் தரலாம் .

சாதாரண அறைவெப்ப நிலையில் எட்டுமுதல் பத்துமணி நேரம் வைக்கலாம் .

குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும் ,

அதனுள் உள்ள ப்ரீசர்(-20* c) இல் மூன்று மாதங்கள் வைத்திருக்கலாம் .

எனவே வேலைக்கு செல்வதை காரணமாக சொல்லி தாய் பால்தராமல் இருக்காதிர்கள்

வயிற்றில் குடல் புழு ; (WORM INFESTATION)

உணவின் மூலமும் ,மண்ணில் இருந்தும் குடல் புழு தொற்று வருகிறது . மண்ணில் இருந்து கால் பாதம் வழியே உடலுக்குள் நுழைகிறது .

அறிகுறிகள் :
SYMPTOMS OF WORM INFESTATION
பசி குறைதல் ;
எடை குறைதல் ;
எடை கூடாது இருத்தல் ;
வயிற்றுவலி ;
தூக்கத்தில் பல்லை நரநர என கடித்தல்(bruxism);
ஆசனவாயில்அரிப்பு ;
முகத்தில் சிறு சிறு வெள்ளை தேமல் தோன்றுதல் .

TREATMENT FOR WORMINFESTATION

ஒரு வயதுக்கு மேலே அனைத்து குழந்தைக்கும் குடல் புழுக்கான ALBENDAZOLE என்ற மாத்திரை தர வேண்டும் .ஆறு மாதத்திற்குஒரு முறை தந்தால் போதும் .


dose ஒரு வயது முதல் இரண்டு வயது வரை 200 mg (பாதி மாத்திரை )

இரண்டு வயதிற்கு மேலே (எல்லா வயதிற்கும் ) 400 mg.(ஒரு மாத்திரை )

trade name; zentel 400, bandy 400, wonil 400 , alminth 400, bendwin 200

 
படுக்கையில் சிறுநீர் கழித்தல் ( NOCTURNAL ENURESIS)
ஐந்துவயது வரை இது இயல்பானது . ஐந்து வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழித்தால்செய்ய வேண்டியது :

குழந்தையை திட்டவே கூடாது .
குழந்தைக்கு தெரியும் முன்பே ஈரமான படுக்கை விரிப்பை மாற்றி விட வேண்டும்
பிறர் முன் குறை கூற கூடாது
மாலை ஐந்துமணிக்கு பிறகு டீகாபி மற்றும் பால் போன்ற திரவ உணவை தவிர்க்கவும் . இது மிக முக்கியம் .தூங்க போகும் முன் கட்டாயம் சிறுநீர் கழிக்க சொல்லவும் . மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அவனை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லவும் .

பகலில் சிறுநீரை அடக்க பயிற்சி தரவும். அதாவது நீர் நிறைய குடிக்க சொல்லவும் .பின் அவனை நீர் போகாமல் அடக்கி வைக்க சொல்லவும் .இதனால் சிறுநீர் பை வலு பெறும் .
TREATMENT OF NOCTURNAL ENURESIS
மேலே சொன்ன வழியை செய்தும் படுக்கையில் நீர் கழித்தால் மருத்துவர் ஆலோசனை படி imipramine &desmopressin ஆகிய மருந்துகளை எடுத்துகொள்ளவும். imipramine tablet ஆறு வயதுக்கு பிறகே தரவேண்டும்
தடுப்பூசி காலஅட்டவணை
பிறந்த உடன் -பி சி ஜி+ போலியோசொட்டு மருந்து+ மஞ்சள்காமாலை பிஊசி

45வது நாள் - முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து+ மஞ்சள் காமாலை பிஊசி

75 வது நாள் - முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து

105வது நாள் - முத்தடுப்பு ஊசி +போலியோ சொட்டு மருந்து

6 வது மாதம் - மஞ்சள் காமாலை பி ஊசி

9 வது மாதம் தட்டம்மை தடுப்பூசி

18 வது மாதம் முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு

2 வயது டைபையடு தடுப்பு ஊசி

5 வயது முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து

10வயது & 16வயது TT

மேலே உள்ளது தவிர புதிய தடுப்பு ஊசி களும் உண்டு .

மூளை காய்ச்சல் தடுப்பு ஊசி - 45 & 75 & 105 நாட்கள்
மூன்று அம்மை ஊசி(MMR) - 15 மாதங்கள் & 5 வயது
கொத்தமல்லி அம்மை (chicken pox) - ஒரு வயதிற்கு மேல ஒரு முறை மட்டும்

மஞ்சள் காமாலை ஏ - ஒரு வயதிற்கு மேலே

typhoid vaccine மூன்று வருடத்திற்கு ஒரு முறை போடவேண்டும் .நல்ல தமிழில் குழந்தைக்கு பெயர் சூட்டுங்கள்
அம்மாவின் முதல் எழுத்தையும் பெயரில் சேருங்கள்
.

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...