குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் :
குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வடிவது பொதுவாக காணப்படும் ஒரு அறிகுறி , ஆனால் பெற்றோரை மிகவும் பயமுறுத்தும் , பெரும்பாலும் இது ஆபத்தற்றது .
காரணங்கள் :
மூக்கை நோண்டுதல் , கிள்ளி கொண்டே இருத்தல்
அடி படுதல்
ரத்தம் உரையாத தன்மை (haemophilia )
உலர்வான சீதோஷ்ண நிலைமை (winter )
ADENOID எனப்படும் தொண்டை கட்டி
அலர்ஜி
SINUSITIS சைனுசிடிஸ்
குடும்ப வரலாறு
மருத்துவம் :
பதட்டம் அடைய கூடாது
மூக்கை சிந்தவே கூடாது , அப்படி செய்தால் ரத்தபோக்கு அதிகரிக்குமே தவிர குறையாது
குழந்தையை முன் புறமாக சாய வைத்துகொள்ளுங்கள்
மூக்கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலால் நன்கு அழுத்தி பிடிக்கவும் , இப்படி பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .
மூக்கு உலராமல் இருக்க வாசலின் ஜெல் , சலைன் சொட்டு மருந்து இரவில் போட்டுவிடலாம் .