Sunday, 3 February 2013

சிறுகுழந்தைகளுக்கு விக்கல் வருவது ஏன்?

வயிற்றுக்கும் நுரையீரலுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் உதரவிதானம்,(DIAPHRAGM) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய தசைப்பகுதியாகும் . இது தூண்டப்பட்டால் ,எரிச்சலூட்டப்பட்டால் வருவதே விக்கல் . விக்கல் வரும்போது உதரவிதானத்தசை வேகமாக சுருங்கி விரிகிறது.




 சிறுகுழந்தைகள் பாலுடன் காற்றையும் சேர்த்து வேகமாக விழுங்கும் இயல்புடையவை.இதனால் இரைப்பை(stomach) விரிவடைந்து மேலே உள்ள உ.விதானத்தை தொடுவதால் விக்கல் வரும். இதைத்தவிர்க்க பால் தந்தவுடன் குழந்தையை தோளில் போட்டு குடித்த காற்று முழுவதும் ஏப்பம் (Burping) வழியே வெளியேறச் செய்யவேண்டும்.

சிலநேரங்களில் எந்தவொரு காரணமும் இன்றிகூட விக்கல் வரலாம். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மருந்துகொடுத்தால் சரியாகிவிடும்


         

Wednesday, 21 November 2012

க்ரீன் டீயின் நன்மைகள் (GreenTea -Health Benefits)

கிரீன் டீயின் நன்மைகள்........

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

* இதய நோய் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது.

* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

நன்றி : மாலைமலர்

Wednesday, 23 November 2011

பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?

சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.

ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.

எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!
posted from Bloggeroid

Sunday, 22 August 2010

குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல் :

EPISTAXIS  IN CHILDREN : 
குழந்தைகள்  மூக்கில்  ரத்தம் வடிதல் :
   குழந்தைகளின்       மூக்கில் ரத்தம் வடிவது  பொதுவாக  காணப்படும்  ஒரு அறிகுறி , ஆனால் பெற்றோரை   மிகவும் பயமுறுத்தும்  , பெரும்பாலும் இது ஆபத்தற்றது .

காரணங்கள் :

மூக்கை  நோண்டுதல் , கிள்ளி கொண்டே  இருத்தல்

 அடி படுதல்

ரத்தம்  உரையாத  தன்மை (haemophilia )

உலர்வான  சீதோஷ்ண  நிலைமை (winter )

 ADENOID  எனப்படும்  தொண்டை கட்டி

  அலர்ஜி

 SINUSITIS  சைனுசிடிஸ்

 குடும்ப வரலாறு
 
மருத்துவம் :

   பதட்டம்  அடைய  கூடாது


   மூக்கை சிந்தவே  கூடாது , அப்படி செய்தால்      ரத்தபோக்கு  அதிகரிக்குமே  தவிர  குறையாது


குழந்தையை  முன் புறமாக  சாய வைத்துகொள்ளுங்கள்


மூக்கை கட்டை விரல்  மற்றும்  ஆள் காட்டி விரலால்  நன்கு அழுத்தி  பிடிக்கவும் , இப்படி  பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .


 மூக்கு உலராமல் இருக்க  வாசலின் ஜெல் , சலைன்  சொட்டு  மருந்து இரவில் போட்டுவிடலாம் .




அடிக்கடி  ரத்தம் வந்தால் , மருத்துவரை  அணுகி  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

New blog

Kindly visit my new blog for more posts about Child health problems https://www.babiesclinic.org