Sunday, 5 May 2013

அம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?

அம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?

அம்மை என்பது வைரஸ் (virus) கிருமியினால் ஏற்படும் தொற்றுவியாதி. காற்றின் மூலமும் ,தொடுவதின் மூலமும் வேகமாகப் பரவக்கூடியது .

இறைநம்பிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை.மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
மருத்துவ மனைக்கு செல்லும் முன் முன்னேற்பாடாக முன் பதிவு செய்யும்போது இது குறித்து நாம் தெரிவித்து விடவேண்டும். இதனால் நாம் காத்திருக்க தேவையில்லாமல் உடனே காண்பித்துவிட்டு வரலாம்.பிறருக்கு நோய் தொற்று வராமல் தடுக்கலாம்.
அல்லது மொபைலில் படம் எடுத்தும் சென்று காண்பிக்கலாம் .  குழந்தகளைத் தாக்கும் பொதுவான அம்மை நோய்கள்

1.)மணல்வாரி அம்மை(Measles)

2.)தாளம்மை(புட்டாலம்மை)(Mumps)

3.)சிக்கன்பாக்ஸ் (நீர் குளுவான் அம்மை)(chickenpox )

4.)ருபெல்லா அம்மை (Rubella)(German Measles)


மணல்வாரி அம்மை:
6 மாதம் முதல் 2 வயதுடைய குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.
முகம்,கழுத்து மற்றும் காதின் பின்புறம் ஆகிய இடங்களில் தொடங்கி பின் உடலின் கீழ்பகுதிகளுக்கு பரவும்.
இதற்கான தடுப்பூசி உள்ளது . 9 வது மாதமுடிவில் முதல் தவணை தனியாகவும், 15 மாதத்தில் MMR என்ற மூவம்மை ஊசியாக இரண்டாம் தவணையும் 5 வயதில் MMR மூலம் இறுதி தவணையும் போடவேண்டும்.

மணல்வாரி அம்மை வந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும்.காய்ச்சலைக்குறைக்கும் மருந்துகளும் ,வறட்டு இருமலை குறைக்க மருந்துகளும் தருவார். இதுபோல் மணல்வாரி அம்மை வந்த குழந்தைகளுக்கு விட்டமின் A நீர்மக்கரைசலை கட்டாயம் தரவேண்டும்.அதையும் மருத்துவர் தருவார் .

மணல்வாரி அம்மை வைரஸ் கிருமி என்றபோதிலும் அது உடலில் எதிர்ப்புசக்தியை வெகுவாகக் குறைப்பதால் பாக்டீரியா நோய்த்தொற்று எளிதில் ஏற்பட்டு நிமோனியா சளி,கடுமையான வயிற்றுப்போக்கு எற்படும்.எனவே மிகக்கவனம் தேவை .

தாளம்மை/புட்டாலம்மை
இது மம்(ப்)ஸ் எனப்படும் வைரஸ் கிருமியினால் வருவது. தாடையில் உள்ள உமிழ்நீர்சுரப்பியை பாதிப்பதால் தாடையின் இருபுறமும் காதிற்கு கீழ் உள்ள பகுதி வீங்கியிருக்கும் .காய்ச்சல் இருக்கும்.

இதற்கான தடுப்பூசி 15 மாதம் மற்றும் 5 வயதில் இரு தவணைகளாக MMR என்ற தடுப்புசி வழியாக போடப்படுகிறது


மருத்துவரை அணுகினால் காய்ச்சல் குறையவும்,தாடை வலி குறையவும் மருந்து தருவார்

சிக்கன்பாக்ஸ் : இது குறித்த தகவல்களை  இணைப்பில் படியுங்கள்


ருபெல்லா அம்மை :
இது பொதுவாக மிதமான காய்ச்சல் , இருமல் மற்றும் கழுத்தைச் சுற்றிலும் சிறுசிறு நெறிகட்டிகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது

ஆனால் கர்ப்பிணிகளுக்கு ருபெல்லா வந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்
1.பிறவி காது கேளாமை
2.இருதய குறபாடு
3.கண் புரை நோய்
4.வளர்ச்சியடையாத தலை

பெண்குழந்தக்கு கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். 15 வது மாதம் மற்றும் 5 வயதில் இரு தவணைகளாக MMR என்ற தடுப்பூசி போடப்படுகிறது .

ஏற்கனவே போடவில்லையென்றாலும் பருவம் அடைந்தபின்னோ அல்லது திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்போ போட்டுக்கொள்ளவேண்டும் .

அதாவது தடுப்பூசி போட்ட 3 மாதங்களுக்குள் கருத்தரிக்கக்கூடாது


5 comments:

 1. /// இறைநம்பிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை... மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது... /// அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை...

  ஒவ்வொரு அம்மை நோய்களைப் பற்றிய
  விளக்கங்களுக்கு நன்றி...

  ReplyDelete
 2. thank you for the feedback :)

  ReplyDelete
 3. வணக்கம் சார், நலமாய் இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்!.

  என் தளத்தில் தங்களின் முந்தைய பதிவுகளை தொகுத்து ஒரு பிடிஎப் புத்தகம் வெளியிட்டிருந்தோம், தங்களுக்கும் நினைவிருக்குமென்றே நினைக்கிறேன் அது குறித்து நண்பர் ஒருவர் http://gsr-gentle.blogspot.ae/2011/06/kulanthai-maruththuvam-child-care.html பதிவில் பின்வருமாறு எழுதியுள்ளார்...

  அ. இரவிசங்கர் | A. Ravishankar wrote on 2014-01-27 at 19:54 to kulanthai maruththuvam child care ( Comments)
  Reply to thread | comment
  Report comment
  வணக்கம். இந்நூலை FreeTamilEbooks.com தளம் மூலம் தர முன்வந்தால் நன்றாக இருக்கும். இதற்கு நூலை எழுதிய மருத்துவரின் ஒப்புதலும் தேவை. நன்றி. http://freetamilebooks.com/contact-us/

  தங்களின் பதில் தேவை...

  நட்புடன்
  ஞானசேகர் நாகு

  ReplyDelete
 4. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...