Thursday, 10 May 2012

ஆஸ்ப்ரின் என்னும் அருமருந்து:

ஆஸ்ப்ரின் என்னும் அருமருந்து:
அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட் எனப்படும் ஆஸ்ப்ரின் 1890 ல் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 100 வருடங்களுக்கு மேலாக மருத்துவத்துறையில் பயன்பட்டு வருகிறது.
ஆஸ்ப்ரின் என்ற ப்ராண்ட் பேரே பொதுவாக வழங்கப்படுகிறது (xerox company போல)

நூறு ஆண்டுகள் ஆனாலும் இன்றும் வருடத்திற்கு 40,000 டன் ஆஸ்ப்ரின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருவதே அதன் சிறப்பைக்காட்டக்கூடியதாக உள்ளது.

ஆரம்பத்தில் ஆஸ்ப்ரின் காய்ச்சல் ,தலைவலி, உடல்வலி ஆகியவற்றிக்கே பெரும்பாலும் பயன்பட்டது.ஆனால் நாளடைவில் பாரசிட்டமால் கண்டுபிடிக்கப்பட்டபிறகு அதன் பயன்பாடு குறைந்தது. ஏனெனில் ஆஸ்ப்ரின் இரத்தம் உறைவதை தடுத்துநிறுத்தும் தன்மையுடையது ;குடல் மற்றும் இரப்பையில் புண்களை ஏற்படுத்தும்

ஆஸ்ப்ரினை குழந்தைகளுக்கு கொடுத்தால் Reye s syndrome என்ற நோய்வருவதால் 15 வயதுக்கு கீழ் தவிர்ப்பது நல்லது

பெரியவர்களும் chickenpox மற்றும் flu காய்ச்சல் உள்ளபோது தவிர்ப்பது நலம்

ஆஸ்ப்ரினின் இந்த இரத்தம் உறைவதைத் தடுக்கும் தன்மையை மருத்துவவுலகம் தனக்கு சாதகமாகப்பயன்படுத்த துவங்கியதில் இருந்து மாரடைப்பினால் வரும் பாதிப்புகளும் இறப்புகளும் பெருமளவு குறைந்து மீண்டும் ஆஸ்ப்ரின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது

ஆஸ்ப்ரின் இருவழிகளில் தரலாம்
1:) தினமும் 75 மிகி ஒரு வேளை ;இது ஏற்கனவே இரத்தக்கொதிப்பு மற்றும் சிறிய அளவில் இருதயக்குறைபாடுள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது
2:) 150-300 மிகி ஒரே டோஸ் ;இது ஏற்கனவே ஆஸ்ப்ரின் சாப்பிடாத ஆனால் மாரடைப்பின் அறிகுறிகள் ஒன்றோ அதற்கு மேலோ தெரியும்போது முதலுதவியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.பின் உடனடியாக மருத்துவரை நாடி ECG எடுத்து தொடர்மருத்துவம் செய்யவேண்டும்

Tuesday, 8 May 2012

மாம்பழத்தின் மகிமை

சங்ககாலம் தொட்டே சிறப்பு பெற்ற முக்கனிகளில் ஒன்று மாம்பழம் . இந்திய மாம்பழங்கள் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவை. மாங்கா என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே mango வும் மாம்பழம் என்ற சொல்லில் இருந்து ஆம் என்ற ஹிந்தி சொல்லும் தோன்றியிருக்கலாம்
இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் உடலுக்கு நன்மை செய்பவை

மாம்பழத்தில் விட்டமின் A மற்றும் beta-carotene,alpha-carotene,beta-cryptoxanthin ஆகிய சத்துக்கள் நிறைய உள்ளது.இவைகள் கண் பார்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் உதவும்.
மற்ற பழங்களில் உள்ளது போலவே மாம்பழத்திலும் பொட்டாசியம் (potassium) தாதுப்பொருள் நிறைய உள்ளது .இது இருதயத்திற்கு நல்லது.

மேலும் விட்டமின் B6 (pyridoxine) ,விட்டமின் c , விட்டமின் E போன்ற உயிர்சத்துக்களும் உள்ளது

விட்டமின் B6 நரம்பு மண்டல GABA எனப்படும் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானது. மேலும் இது பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது

விட்டமின் C கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்புக்கு உதவுவதோடு சிறந்த Anti-oxidant ஆக செயல்பட்டு உடலில் நுழையும் free radical எனப்படும் கலகக்காரணிகளை கட்டுப்படுத்தும்
விட்டமின் E வும் free radical ஐ கட்டுப்படுத்தும்

குறிப்பு :இந்த free radical என்பவை ரவுடிகளைப்போன்றவை .நம் உடலில் புகுந்து கலகத்தையும் கலக்கத்தையும் எற்படுத்தவல்லவை.இவைகளை எதிர்த்து போராடுவன anti-oxidant எனப்படும் பொருட்கள்.
அனைத்து பழங்கள் மற்றும் பச்சைக்காய்கறிகளில் இவை அதிகம் .

உணவை அதிகமான வெப்பநிலையில் சூடுபடுத்தவோ வறுக்கவோ பொரிக்கவோ செய்யும்போது அதிலுள்ள anti-oxidant அழிந்து free radical உற்பத்தியாகின்றது.

உடலின் பல நோயகளுக்கு (புற்றுநோய்,மாரடைப்பு ,இருதய வியாதி ,இரத்தக்குழாய் குறைபாடு ,நரம்பு மண்டலக் கோளாறு ) இந்த கலகக்காரணிகளே காரணம்
(கலகக்காரணி என்றே சும்மா மொழிபெயர்த்துள்ளேன்)


மேலே சொன்ன நன்மைகள் மாம்பழத்தில் மட்டுமே கிடைக்கும் ; புட்டிகளில் அடைக்கப்பட்ட செயற்கைச்சாற்றில் அல்ல

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...