Friday, 6 April 2012

நாய் வளர்க்கும் முன்:நில் ,கவனி,லொல்

நாய் வளர்ப்பவர்களின் கனிவான கவனத்திற்கு:

நாயைப்போல் நல்ல நண்பன் கிடைப்பது அரிது.ஆனால் நாய்க்கு வெறிநோய் வந்தாலோ அதன்மூலம் நமக்கு வந்தாலோ பிழைப்பது மிக மிக அரிது. எனவே தடுப்பூசி போடாமல் நெருங்கி பழகாதீர்கள்.நாய்க்குட்டியிண் மூன்றாவது மாதத்தில்

முதல் ஊசியும், பின்னர்

வருடத்துக்கு ஒரு முறையும்

தடுப்பூசி போடவேண்டும்.

ரேபிஸ் எனப்படும்

வெறிநோயானது தெருநாய்களிடம்

இருந்தே வீட்டில் வளர்க்கும்

நாய்களுக்குப் பரவும். எனவே,

தெருநாய்களிடம் வீட்டில்

உள்ள நாய்களைப்

பழகவிடாமல்

பார்த்துக்கொள்வது நல்லது.


Published with Blogger-droid v2.0.4

Wednesday, 4 April 2012

கேள்வி/பதில்

கேள்வி: தாய்க்கு இரத்தப்பிரிவு நெகடிவ் எனில் என்ன முன்னெச்சரிக்கை தேவை ?


பதில்:தாய்க்கு நெகடிவ் பிரிவும் குழந்தைக்கு பாசிடிவ் பிரிவும் இருக்கும்போது முதல் குழந்தைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. குழந்தை பிறக்கும்போது குழந்தையின் பாசிடிவ் ரத்தம் தாயின் உடலில் கலக்கும் போது எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகும். இது அடுத்து பிறக்கும் குழந்தையைத் தான் பாதிக்கும்.


இதற்கு RH incompatibility என்று பெயர்.


இதைத் தடுக்க முதல் குழந்தை பிறந்தவுடன் anti-D தடுப்பூசி போடவேண்டும்.


தாய்க்கும் குழந்தைக்கும் நெகடிவ் பிரிவு என்றால் எந்த பயமும் இல்லை.


Published with Blogger-droid v2.0.4

Tuesday, 3 April 2012

குழந்தை வளர்ப்பு/வார்ப்பு எது முக்கியம்?

குழந்தை வளர்ப்பு/வார்ப்பு எது நிஜம்?

ஒரு குழந்தையின் குணத்தை இரு காரணிகள் தீர்மானிக்கின்றன.

NATURE: (வார்ப்பு) இது மரபணு மூலமாக பெற்றோரிடமிருந்து வருவது.இதை மாற்றுவது கடினம்.அதாவது ஜீன் தெரபி எனப்படும் முறையால் சிரமப்பட்டு மாற்றவழி கண்டுபிடித்துள்ளனர்.

NURTURE:(வளர்ப்பு) இது எல்லாருக்கும் தெரிந்ததுதான்."நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"

nature ஐ ஒரளவும் nurture ஐ முழுதும் கட்டுப்படுத்தலாம்.


கரு வளரும்போது தாய்க்கு ஏற்படும் மனஉளைச்சல் குழந்தையை பாதிக்கலாம்.அந்த நேரத்தில் சரியாக சாப்பிடாது இருத்தல்,அலைச்சல், புகைப்பிடித்தல்,போதைப்பொருள் பயன்படுத்துதல், ஃபோலிக் ஆசிட் விட்டமின் குறைபாடு போன்றவை குழந்தையின் மூளைத்திறனை நேரடியாக பாதிக்கும். பதின்பருவ கர்ப்பம் -(teenage pregnancy) , TORCH infection போன்றவையும் கருவை நேரடியாக பாதிக்கும்.

எனவே நல்ல பெற்றோரிடம் பெரும்பாலும் நல்ல குழந்தை மட்டும்தான் பிறக்கும் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

வளர்ப்பினால் எல்லா குழந்தைகளையும் நல்லவனாகவும்,வல்லவனாகவும் மாற்றமுடியும் .


Published with Blogger-droid v2.0.4

Monday, 2 April 2012

குழந்தைகளுக்கு தீக்காயம் பட்டால் என்ன செய்யவேண்டும்?

குழந்தைகளுக்கு தீக்காயம் பட்டால்:

பதட்டம் அடையாதிர்கள்.முதலில் ஆடைகளை கழற்றிவிடுங்கள் .தீ பட்ட இடத்தில் 5 நிமிடங்கள் வரை சாதாரண வெப்பநிலை உடைய சுத்தமான நீரை ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . தீக்காயத்தில் இங்க் ,சொட்டு நீலம் போன்றவற்றை போடக்கூடாது.

ஐஸ் தண்ணீர் போடக்கூடாது.

சிறிய காயத்திற்கு SILVEREX என்ற களிம்பு போட்டால் போதும்.

பெரிய காயமெனில் முதலுதவிக்குப் பிறகு மருத்துவரை அணுகவும்


Published with Blogger-droid v2.0.4

Sunday, 1 April 2012

முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்?இரண்டு காரணங்களுக்காக :

1. பச்சை முட்டையில் avidin என்ற

வேதிப்பொருள் உள்ளது.நாம்

அப்படியே குடிக்கும்போது அது குடலில்

சென்று biotin என்ற விட்டமின்

சத்தை உறிஞ்ச விடாமல்

செய்கிறது.தொடர்ந்து பச்சை முட்டை

சாப்பிட்டுவந்தால் கடும் பயோட்டின்

குறைபாடு ஏற்படும்

2.முட்டையின் ஓடு மெல்லியது.அதில்

சிறுசிறு கண்ணுக்குத் தெரியாத

துவாரங்கள் இருக்கும்.வெளி ஓட்டில்

உள்ள கோழியின் கிருமிகள்

உள்செல்வது எளிது.மேலும் நீண்ட

தொலைவுகள்

இது எடுத்துச்செல்லப்படும்போது

அதிர்வுகள் மூலம் கண்ணுக்குத்தெரியாத

சிறு கீறல் விழும்.இதன் மூலமும் சால்மோனெல்லா, பறவைக்காய்ச்சல்

கிருமிகள் எளிதில் பரவும்.

மேலும் முட்டையானது கிருமிகள் வளர

ஒரு அருமையான ஊடகம் (good culture media).

எனவே எல்லா வயதினரும் எப்போதும்

முட்டையை வேகவைத்தோ

வறுத்தோதான் சாப்பிடவேண்டும்.

ஆஃப் பாயிலில் ஆஃப் ரிஸ்க் உள்ளதுPublished with Blogger-droid v2.0.4

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...