Saturday, 8 October 2011

குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


   சில தகவல்கள்:


எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து


சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம்


பூனை,குரங்கு ,நரி,ஓநாய், வவ்வால் போன்றவை  மூலமும் ரேபிஸ் பரவும் 


ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒண்றுமில்லை.மரணம் நிச்சயம்


வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு.எனவே ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும்.


உணவு கட்டுப்பாடு ஏதும் கிடையாது .


 முதலுதவி :


நல்லா சோப் போட்டு கழுவ வேண்டும் .இது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும்.அதன் பின் ஆண்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம்.
கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது .


உடனே முதல் தடுப்பூசியை  போட்டுக்கொள்ளவேண்டும்.


கடியின் வகைகள்:


category I : நாயை தொடுதல்,உணவு ஊட்டுதல்,காயம் படாத தோலை நக்குதல்


               மருத்துவம் : தேவையில்லை


category II: சிராய்ப்பு காயம்,கவ்வுதல்,குறைவான அளவில் ரத்தக்கசிவு


             மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி
category III: ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல்,ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், 
நரி,ஓநாய்,வவ்வால் கடி
       மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி+ இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து


ஊசிகள்:


1. டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும் 
போடவேண்டியது
2. ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவமனையில் இது இலவசமாக் போடப்படும்
தனியாரில் ரூ 350-500 வரை ஆகும் 
3.இம்யுனொக்லொபின் -அதிகமான அளவில்  
உள்ள காயதிற்கு கட்டாயம் போட 
வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கும் .


வேறு சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

14 comments:

 1. Dog bite is such a common occurrence and you have given valuable first aid tips along with very useful information. Thanks for the post.
  amas32

  ReplyDelete
 2. உபயோகமான தகவலுக்கு நன்றி டாக்டர்
  -ஷைலஜா

  ReplyDelete
 3. நல்ல தகவல் நண்பரே

  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 4. பகிர்விற்கு நன்றிங்க டாக்டர்.

  இந்த உதவி குறிப்புகள் குழந்தைகளுக்கு மட்டும் தான் பொருந்துமா?

  ReplyDelete
 5. நன்றி amas அக்கா!

  நன்றி sakthi !

  நன்றி சத்ரியன்/ இது எல்லாருக்கும் பொருந்தும்

  ReplyDelete
 6. ஹலோ டாக்டர் , உங்கள் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  எனது குழந்தைக்கு இரண்டு மாதம் ஆகிறது, தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வருகிறேன். முன்பு அடிக்கடி மலம் கழித்து வந்தது, தற்போது இரண்டு நாட்களாக மலம் கழிக்கவில்லை.

  இதற்கு என்ன செய்யவேண்டும், இதற்கான கரணம் என்ன .

  தங்கள் தொடர்பு கொள்வது எப்படி? தங்கள் கிளினிக் எங்கே உள்ளது..

  நன்றி

  ReplyDelete
 7. நல்ல பதிவு. உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. நன்றி ஷைலஜா அவர்களே!
  பாலா>> தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தை ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் போவது அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை போவது ஆகிய இரண்டுமே நார்மல்தான்.பயம் தேவையில்லை. தாய்ப்பால் மட்டும் தரவும்.தண்ணீர் கூட தேவையில்லை

  ReplyDelete
 9. Thanks Dr for the useful info.

  Pl blog more in children upto 12 years of age

  VS Balajee

  ReplyDelete
 10. It was very interesting for me to read that blog. Thanks the author for it. I like such topics and everything that is connected to them. I would like to read more soon.
  Volvo S90 Turbocharger

  ReplyDelete
 11. sir advice them to continue vaccination untill 3 booster doses atlest in the days of 0,3,7,14,28,60 if they cant follow all these

  ReplyDelete
 12. Thanks for the tips dr. Recently thru one of my friend I heard this case. Her relative died bcos of dog bite since he didn't take injection after the bite. It was very pathetic.

  Priya Suresh, qatar

  ReplyDelete
 13. dR, ASSAIVAM SAPITAKODATHA, OIL FOOD

  ReplyDelete
 14. Thanks for your very useful Information. I will bookmark for next reference. I really liked this part of the article. I wait for the next post :)

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...