நான் யார் ?

Friday, 10 June 2011

குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?

Reactions: 
குழந்தைகளுக்கு டீ,காபி  எப்பொழுது  தர ஆரம்பிக்கவேண்டும் ?









டீ,காபி போன்ற  உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது .


டீ தூளில் உள்ள  மூல பொருள்கள் :

6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic substances, 2% dectrine, 3% pectic acid and pictine, 17% tannic acid, 4% chlorophyll and raisin, 26% cellulose and 7% salt.



டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக்  அமிலம்  இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும் .எனவே அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும் . மேலும் இது பசியை  குறைக்கும் .


டீயில் 2 % கேபின்  உள்ளது .புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைபடுத்தும்  (addictive ) பொருள் ஆகும்.

நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும்  விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை  இது ஏற்படுத்தும்.


கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை  தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனிவே இந்த பழக்கத்தை  விட்டால் தலை வலி ,சோர்வு  ,நடுக்கம்  முதலியன ஏற்படலாம் (withdrawl  symptoms )




   டீ ஒரு diuretic  அதாவது  அதிகமான அளவில் சிறுநீரை  வெளியேற்றும் தன்மைகொண்டது .    உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும் .எனவே நீர் இழப்பு ஏற்படும் .மேலும் இது சிறுநீரகங்களுக்கு  வேலை பளுவை அளிக்கிறது.சாதாரண குழந்தைகளை  விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும் .


டீ நேரடியாகவும் ,மறைமுகவாகவும்  மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது .



டீயில் உள்ள alkaloid  பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல்  தடுப்பதால் iron deficiency  anemia  என்ற வகை ரத்த சோகை  ஏற்பட வாய்ப்பு உள்ளது.


காபியில் கேபின் அளவு  டீயில் இருப்பதைப்போல இருமடங்கு  உள்ளது .மேலே சொன்ன  விளைவுகள்  இருமடங்கு ஏற்படும் .மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது .எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு  ஆபத்தானது .

(சமீபத்தில்  குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது .)

4  வயதுக்கு  மேற்பட்ட குழந்தைகளுக்கு  ஒருமுறை மட்டும்  குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ  தரவும் .இடையில்  விடுமுறை நாட்களில்  இதற்கும் விடுமுறை தரவும் .




பின் இணைப்பு : டாப் 10 சோர்வடைய  காரணங்கள்






8 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி டாக்டர், குழந்தைகளுக்கு டீ,காபி கொடுத்தால் பின்னர், ஹார்லிக்ஸ் போன்ற பானங்களை குடிக்க மறுக்கிறார்கள். அது அந்தளவுக்கு குழந்தைகளை கவர்கிறது.

Anonymous said...

ரொம்பத் தேவையான ஒரு விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறிர்கள். வீட்டில் வயதானவர்கள் குழந்தைகளிடம் சிறிது குடிக்கக் குடுத்துப் பழக்கிவிடுவார்கள். மிகவும் தவறு.The mention about the ad is especially important. Very well written!
amas32

ஜிஎஸ்ஆர் said...

அன்பின் ராஜ்மோகன் அவர்களுக்கு தஙகளின் கட்டுரைகளை மொத்தமாக பிடிஎப் புத்தகமாக மாற்றி வைத்திருக்கிறேன் அதை இனையத்தில் வெளியிட தஙகள் அனுமதி தேவை.

அன்புடன்
ஞானசேகர் நாகு

SENTHILKUMAR THIYAGARAJAN said...

wounderful article, detailed compositions about tea/coffee, informative one. keep on right. This is senthilkumar.T, physiotherapist.

சேலம் தேவா said...

பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர்..!!

kids doctor said...

நன்றி ப .கு . ராமசாமி சார்



நன்றி amas அக்கா!



நன்றி gsr சார் !உங்களுக்கு இல்லாத உரிமையா! ஆவலுடுன் எதிர் நோக்கும் !



நன்றி செந்தில் குமார் !



நன்றி சேலம் தேவா!

Anonymous said...

Hello doctor, My baby is 5 month old. can i give dry grapes extract with warm water(1 spoon) per day.somebody told it will control constipation. shall i give?

Dr.Dheep said...

Really good post. Still, is tea or coffee necessary by 4 yeas of age too? I myself tell parents only to give it around their exam time to keep them awake.