Tuesday, 17 May 2011

பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?


பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?

          தேன் என்றாலே  உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து  என்ற கருத்து பரவலாக  உள்ளது . ஆனால் தேன் மலரில் உள்ளபோது  சுத்தமாகவே உள்ளது பின்பு  தேனீயால் எடுக்கப்பட்டு  தேன்கூட்டில்  சேகரிக்கப்பட்டு அதனை  எடுத்து நாம் உபயோகிக்கும்போது   அதில்  அல்லேர்ஜியை உண்டாக்கும்  மகரந்த  தூள்களும்  , மிக  கடுமையான  பொடுலிசம்(BOTULISM ) என்ற  வியாதியை  உண்டாக்கும்   Clostridium bacteria  இருக்கலாம் .


எனவே குழந்தைகளுக்கு  குறிப்பாக  ஒரு வயதுக்கு  குறைவான  குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .


BOTULISM  வந்தால்  தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
  
உடல் தளர்ச்சி -குழந்தையை  தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது 

பால் குடிக்க  மறுப்பது

சோம்பலாக   அழுவது (WEAK  CRY )

மலச்சிக்கல்


எனவே தேனை  நேரடியாகவோ  மறைமுகமாகவோ ஒரு வயது  குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க  கூடாது  .

           


அலர்ஜி , ஆஸ்த்மா  உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும்  தேன் தராமல் இருப்பது  நல்லது 


 honey should not be fed to infants younger than 1 year old.

 Clostridium bacteria that cause infant botulism usually live  in soil and dust. they can also contaminate certain foods esp honey in particular. which causes botulism in less than one year


Infant botulism can cause

 muscle weakness, 
 poor sucking,
a weak cry,
constipation,
decreased muscle tone (floppiness).Parents can reduce the risk of infant botulism by not introducing honey or any processed foods containing honey (like honey graham crackers) into their baby's diet until after the first birthday.

older kids can  better able to handle the bacteria.10 comments:

 1. useful and this news is new to me.Thanks a lot doctor.

  ReplyDelete
 2. இந்த அவசரமான சூழ்நிலையில் குழந்தை பராமரிப்பு என்பது மிகவும் குறைவாகிப்போனது . மிகவும் பயனுள்ளத் தகவல் தந்திருக்கிறீர்கள் நன்றி

  ReplyDelete
 3. அருமையான தகவல் டாக்டர் ,
  நன்றி ,
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 4. அன்பின் ராஜ்மோகன் வாழ்த்துகள்
  இன்று தான் தங்கள் வலைத்தளம் வர முடிந்தது அதில் ஆனந்தவிகடனில் உங்கள் தளம் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி மேலும் பல பயனுள்ள தகவல்களை தொகுத்து அளிக்க வேண்டுகிறேன்

  அன்புடன்
  ஞானசேகர் நாகு

  ReplyDelete
 5. உங்கள் வலை தளத்தை நான் படித்த வாசகன் என்ற முறையில் பாராட்டுக்கள் கோடி ..
  உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ..

  இன்றைய கட்டுரையை நான் வன்மையாக மறுக்கிறேன் ..

  தேனில் -மகரந்த தூள்கள் இருப்பதில்லை (உங்களது தகவலுக்காக இந்த தளத்தை பாருங்கள் http://www.benefits-of-honey.com )

  தேன் எளிதில் செரிக்ககூடியது -ஆயுர்வேதம் சொல்கிறது -தேனின் குணம் யோகவாகி -அதாவது அது எதனுடன் சேர்கிறதோ அதுவாகி -சேர்ந்த பொருளின் வீர்யத்தை கூடும் குணம் ..பல்வேறு ஆயுர்வேத குழந்தை வைத்திய முறைகளில் மருந்துகளை தேனில் /தாய்பாலில் கொடுக்க சொல்கிறது ..
  நல்ல தேன் அலர்ஜியை உண்டாக்குவதே இல்லை -அலர்ஜியை சரிசெய்யும் -அலர்ஜி உண்டு பண்ணும் காரணிகளை சரி செய்யும் (தங்களது மேலான தகவலுக்காக http://bio.waikato.ac.nz/honey/honey_intro.shtml-என்ற தளத்தில் பாருங்கள் தேன் கிருமி நாசினியாகதான் வேலை செய்கிறது என்பதற்கான அடுக்கடுக்கான தகவல்கள்
  உங்களால் நிரூபிக்க முடியுமா ? தேன் கொடுத்ததால் தான் பொட்டுளிசம் வந்தது என்று -பால் ,பால் பௌடர்களிலும் வரும் என்று பி பி சி சொல்கிறதே -அதற்கான தகவலுக்காக http://news.bbc.co.uk/2/hi/health/1491033.stm-மட்டுபாலிலும் இந்த பாக்டீயர்யா இருக்கத்தானே செய்கிறது

  உங்கள் தகவல்கள் -மேலை நாட்டு காரர்களுக்கு பொருந்தும் -தேனை குழப்பி -பிசாவை முக்கி ,பெப்சியை ஒருவயதுக்கு குழந்தைக்கு கொடுக்கும் பழக்கம் எல்லாம் .எங்கள் தாயமார்களுக்கு தெரியும் எந்த அளவில் ,எதனுடன் தேனை தரவேண்டும் என்று ..பாட்டிமார்கள் இல்லாத /குழந்தை வளர்ப்பே தெரியாதர்களிட.ம் வேண்டுமானால் சொல்லலாம் .நீங்கள் சொன்ன விஷயத்தை .

  அளவறிந்து தேவை கருதி மருந்துடன் ஆறுமாததிற்குள் உள்ள குழந்தைகளுக்கும் ,ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவுடன் தேவை கருதி தரலாம் ..

  தேனில் பல கலப்படங்கள் உள்ளது -அது வேண்டுமானால் உண்மை ..

  நண்பரே ..உங்கள் கட்டுரையை விமர்சிக்க நான் எத்தனிக்கவில்லை -தேன் நமது பாரம்பரிய உணவு,பெரியவர்களை விட சிறியவர்கள் தான் நிறைய உபயோகிக்கிறார்கள் ..பயம் ஏற்படுத்தும் வகையில் உங்கள் கட்டுரை அமைந்தமையால் இந்த பின்னூட்டம் ..தவறு இருந்தால் சுட்டிகாட்டவும் ,மன்னிக்கவும் .

  நண்பரே உங்களது கட்டுரைகள் அனைத்துமே சிறந்தது ,எந்த குறையும் இல்லை ,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த நெருடலான கட்டுரையை மட்டுமே எதிர்த்தவனாக ..மென் மேலும் சேவை புரிய பாராட்டுக்களுடன் ..சின்ன குழந்தைகள் லெஸ் ,குர் குரே போன்ற உணவுகளால் ஆபத்தை பற்றி எழுத விண்ணப்பித்தவனாக ..ஆயுர்வேத மருத்துவன் ..எனது தளம் www.ayurvedamaruthuvam.blogspot.com

  ReplyDelete
 6. its said............ no honey to your honey.

  ReplyDelete
 7. @curesure4u From your own link: honey sometimes contains spores of Clostridium botulinum, so there is a definite risk of introducing the spores into wounds if honey is used as a dressing.Ref:http://bio.waikato.ac.nz/honey/honey_intro.shtml

  ReplyDelete
 8. Hellow டாக்டர்:
  Please respond my message. my child age is 1.4 months. she is eating honey from her birth.Now a days while she crying she can't breath, she is going unconscious stage and come back. Please suggest me.. what i want to do..
  mailid: rsjeyakumar@gmail.com
  Please give me your phone number.. i want to speak with you

  Regards
  Jeyakumar

  ReplyDelete
 9. Jeya Kumar
  It's called as breath holding spells . No need to worry . Read my post about this

  ReplyDelete
 10. பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.

  உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.

  இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள்.

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...