நான் யார் ?

Wednesday, 6 April 2011

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :

Reactions: 

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ?


குழந்தைகளுக்கு  மருந்து தரும் முன்  இரண்டு  விசயங்களை  நாம் கவனிக்க வேண்டும் I .வயது  II .எடை

எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.


அதே போல்  வயதும்  மிக முக்கிய காரணி ஆகும் .பல  மருந்துகளின்  அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .


குழந்தைகளை உட்கார  வைத்தே மருந்து   தருவது நல்லது .படுக்க வைத்து  தரும் போது புரை  ஏறுதல்  என்று சொல்லப்படும்  மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .

மருந்து  கொடுக்கும் முன்  அதை  தருபவர் கைகளை  நன்கு சுத்தம்  செய்து கொள்ளவேண்டும் .



அளவுகள் :

குழந்தைகளின்  எடைக்கு  ஏற்பவே  மருந்துகளை  தரவேண்டும் .   மருத்துவர் சொன்ன அளவை  சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .



ஒரு சி.சி  என்பது  - ஒரு மிலி

ஒரு டீ ஸ்பூன்  என்பது  -5  மிலி

அரை  டீ ஸ்பூன்  என்பது -2 .5  மிலி 

ஒரு டேபிள்  ஸ்பூன்  என்பது -15  மிலி
(டீ யை  விட  டேபிள்  தான் பெருசு )




dropper  எனப்படும்  சொட்டு மருந்து போடும்  குழல் உபயோகிக்கும் போது  மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .



சொட்டுகுழலில் (dropper )  ஒரு மிலி  என்பது  15 -20  சொட்டுகள்  ஆகும் .


குழலின்  முழு அளவு  ஒரு மில்லி  ஆகும் .


குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .


மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என  கவனித்து  மருந்து  தரவேண்டும் .


மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில்  குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .


அதாவது  ௦.5  மிலி  என்பது  எண்ணிகையில்  10  சொட்டுக்கு சமம் .


ஒரு மில்லி  என்பது  எண்ணிகையில் 15 -20  சொட்டுக்கு சமம் .


(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20  சொட்டும் , சற்றே கூழ்  போன்ற மருந்துகள்  15  சொட்டும் இருக்கும் )

பாட்டில் மூடியில்  உள்ள  அளவுகள் சில நேரம்  மாறலாம் .எனவே நாம் மருந்துகளை  அளக்க  சுத்தமான  புது  சிரிஞ்  கொண்டு அளந்தால்  அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .




மருத்துகளை தோரயமாக  அளக்காமல் சரியாக அளந்து  தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே  மருந்து  தருகிறார் .எனவே அவர் எழுதிய  அளவை சரியாக தரவும் .


குறைவாக  கொடுத்தால் மருதின் வீரியம்  சரியான அளவில் கிடைக்காது .




அதேபோல்  எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ  அத்தனை வேளை  தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).


சுரத்திற்கு  தரப்படும்  பாரசிடமால்  மருந்தை 4 -6  மணி நேரத்திற்கு  ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html


ஆன்டி பயாடிக் மருந்துகளை  மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5  நாள் வரை  தரவேண்டும் ஜுரம்  நின்றாலும்  இதனை  தொடர்ந்து தரவேண்டும் .


dry syrup  எனப்படும்  பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர்  கலந்த பின்பே  உபயோகிக்க வேண்டும் .


சிலர்  அவ்வப்போது  பொடியை  எடுத்து அதில் சிறிது  தண்ணீர் கலந்து கொடுக்கும்  பழக்கத்தை  செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு  4 -7  நாட்கள்  மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி  மருந்து பாட்டிலின்  உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .


ஒரு முறை வாங்கிய  மருந்தை மீண்டும் மீண்டும்  மருத்துவரை கேட்காமல்  தரக்கூடாது .



சில மருந்துகளை திறந்தபின்  குறிப்பிட்ட  நாள்கள்  தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி  தேதி  முடியாவிட்டாலும்  திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .



சில தடை  செய்யப்பட்ட  மருந்துகள்  கடைகளில்  கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை  இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .



உதாரணமாக நிமுசுலைட் என்ற  மருந்தை 
  குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது  என்று தடை செய்தும்  அது  மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html



அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும்  மருந்தை 12  வயதுக்கு குறைந்த  குழந்தைகளுக்கு  உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும்  தவறாக  பயன்படுத்த படுகிறது .

22 comments:

Chitra said...

very informative. Thank you.

kids doctor said...

nandri !

Feroz said...

அன்பின் ராஜ்மோகன் சார், என் குழந்தைக்கு ஒரு வருடம் ஆகிறது. ஆனால் பல் இன்னும் வளரவில்லை. பயமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எத்தனை மாதத்தில் பல் வளர தொடங்கும்? மேலும் கால்கள் கொஞ்சம் வளைவாக இருக்கிறது. மருத்துவர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டார். இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். நன்றியுடன்

kids doctor said...

no need to worry. yes u can wait upto 18 months for the teeth to erupt.

yes .its normal for the baby to have a slightly bent legs upto 2 yrs.

u can give calcium +vit d containing syp for bone n teeth development .

also expose yur kid in evening sun light for 20 min daily.

சேலம் தேவா said...

உங்களிடமிருந்து மற்றுமொரு உபயோகமான பதிவு..!! நன்றி..!! :)

Feroz said...

அன்பின் ராஜ்மோகன் சார், தங்களின் பதிலால் மனம் அமைதி அடைந்து இருக்கிறது. நன்றி சார். தங்களின் சேவை தொடர பிரார்த்திக்கிறேன். நன்றியுடன்.

Rekha said...

Hello Sir!!! My newborn baby has hair on the sides and back.He does not have hair from his forehead to the middle of his head..When it will grow? Can i use johnson baby shampoo for hair wash??

♥ RomeO ♥ said...

உபயோகமான பதிவு டாக்டர்.. ரொம்ப நன்றி

எம் அப்துல் காதர் said...

எல்லோருக்கும் பயன்படக் கூடிய நல்ல தகவல் டாக்டர்

kids doctor said...

@rekha

pls specicy the age of the kid.

kids will have sparse hair at birth and will develope thick and dense hair after 6-9 months

மாலதி said...

உபயோகமான பதிவு டாக்டர்.. ரொம்ப நன்றி

Rekha said...

Thank u sir.. Ur blogs are very informative.. he is 1.5month baby. can i use johnson baby shampoo for hair wash? should i use shampoo daily or weekly twice? is oilve oil good for baby complexion?

kids doctor said...

@rekha

for 1.5 month baby hair will be less n sparse .

youy can wash scalp once in a wk. give bath to body once in two days. in between give towel bath.

Kanchana Radhakrishnan said...

உபயோகமான பதிவு. நன்றி.

சிநேகிதி said...

உபயோகமான பதிவு டாக்டர்.. ரொம்ப நன்றி

kids doctor said...

nandri kanchana :))

nandri snehithi:))

Sangeetha Nambi said...

Very very informative. Medical info in single space. Thank u so much. Awaiting for ur next post.

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அவசியமானப் பதிவு . ஒவ்வொருவருக்கும் இன்னு இல்லை என்றாலும் என்றாவது தேவைப்படும் . பகிர்ந்தமைக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் சார், அத்தியாவசிய தகவல்கள், மிக்க நன்றி!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் .. நேரம் இருந்தால் பார்க்கவும் ..

நம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ வியாழன்

sudha said...

hi sir... really useful.
I always say... I learn pediatrics more as a mom than when I was a PG.

one doubt
1 tablespoon is 10 or 15ml? Pl clarify.

Sudha said...

searched and got info sir. Its 15 ml.