Tuesday, 22 March 2011

குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?(WEANING/COMPLEMENTARY FEEDING)குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை  தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் .தண்ணீர் கூட தர தேவை இல்லை .

இதற்க்கு EXCLUSIVE BREAST  FEEDING  என்று பெயர் .கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை .ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .

  இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING  என்று பெயர் .
WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to  the baby (UNICEF)WEANING  என்றால் முற்றிலும்  தாய்ப்பாலை  நிறுத்திவிட்டு  உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால்  தற்போது COMPLEMENTARY  FEEDING  என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது .நான்கு மாதங்களுக்கு  பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை  செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன .


தலை நன்கு நிமிர்ந்து  நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு  பிறகே


குழந்தையின் எடை 5  மாதத்தில் பிறந்ததை போல்  இரு மடங்காக  அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும் . மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும்  இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும் .
குடலில் உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும்  4 -5  மாதங்களில்தான் .

எனவே 180 நாட்கள் முடிந்தபிறகே இணை உணவுகளை  ஆரம்பிப்பது  நல்லது .      முதலில் ஏதேனும் ஒரு  தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது  பழகிய பிறகே  இரண்டு அல்லது  மூன்று  தானிய  கலவைகளை  சேர்த்து அரைத்து  தர வேண்டும் .

அரிசி சாதம் மிகவும் எளிதில் ஆரம்பிக்க சிறந்தது .ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்  மட்டும் தரவேண்டும் .படிப்படியாக  இந்த அளவை அதிகரிக்க வேண்டும் .


தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும் .


     ஒரு வயது வரை  உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை  போல் நூறு மடங்கு கலோரி  தேவை . அதாவது  6 கிலோ  குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு  தேவை .எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக  பாலும்  இணை உணவும்  தரவேண்டும் .ஐஸ் போடாத வீட்டில் செய்த  பழச்சாறு  6  மாதம் முதல் தரலாம் . ஆரஞ்சு , ஆப்பிள்  சிறந்தது .


நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6  மாதம் முதல் தரலாம்


முட்டை - 7  -9  மாதங்களில் தரலாம் . முதலில்  மஞ்சள் கருவும்  பின்பே வெள்ளை  கரு தரவேண்டும் . ஏனெனில் வெள்ளை  கரு சில குழந்தைகளுக்கு  ஒவ்வாமையை  ஏற்படுத்தலாம் .


6 -8  மாதங்களில் மசித்த  உருளை கிழங்கு , மசித்த பருப்பு  ஆகியவற்றை தரலாம் .


மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி  ) 9 -12  மாதங்களில்  தரவேண்டும் .


ஒரு வயது ஆகும்போது  வீட்டில்  செய்யும் எல்லா   உணவுகளையும்  தரலாம் .


அசைவ  உணவை  ஒரு வயதுக்கு  பின்பே ஆரம்பிப்பது  நல்லது .(முட்டை சைவம் தானே ?!!)

ஒரு வயதுடைய  குழந்தை  அம்மா சாப்பிடும்  அளவில் பாதி அளவு  உணவு சாப்பிடவேண்டும்  .(மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )

ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி  தேவை .தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன்  சேர்த்தே தரவேண்டும் .இரண்டு வயது வரை தருவது கட்டாயம் .அதற்க்கு மேல் கொடுப்பது  தனிப்பட்ட விருப்பம் .,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர் )


COMPLEMENTARY  FEEDING -இணை உணவு  ஒரு மிகப்பெரிய  பகுதி  . முடிந்தவரை எழுதி உள்ளேன் .எனவே உங்க சந்தேகங்களை  பின்னுட்டத்தில்  தெரியபடுத்தவும் .

17 comments:

 1. மிக அருமையான பதிவு, அவசியமாய் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது, தொடர்ந்து இதை போன்ற தகவல்களை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete
 2. தெளிவான விளக்கங்கள்.மருத்துவருக்கு நன்றி. :)

  ReplyDelete
 3. I am radhakrishnan.very useful information sir. thank u.

  ReplyDelete
 4. Sir, ஆரஞ்சு சிறந்தது என்று கூறுகிரீர்கள். But in an infant, wont it cause acidic stools? "Src:RD supplement foods that harm and foods that heal"

  ReplyDelete
 5. Dear Doctor,

  This is subhashini from Riyadh. The information in the blog are quite useful. I have few queries which I seek your clarifiation.

  I have a 7 months old baby girl she was 3 kgs at birth and now weighing 11 kgs. I would seek your advice on the below.
  a) I am giving her cereals cerelac with rice since her 5.5 age in the morning after bath and now she is taking aroung 5 spoons mixed with water and aroung 1/4th mashed vegetables (cabbage, carrot, peas, potato and Avaraikai). Is this right feeding. Also she takes NAN 2 formula milk after an hour of this feeding. she refuses to take cereals in the evening, however i am trying every day, is it okay.
  b) I was giving her baked apple at around 4 pm however, she is refusing to take it now. I tried oranges, pears etc, which she is refusing now. What other fruits can I try. Since she was on formula milk from birth, her stool is hard and every day she passes the same with great pressure, with her face becoming red. What fruits can assist in her easy stool passing.
  c) Lastly for the past few days she is showing a sign as of nipple sucking wiht her tongue and mouth after feed and before feed, however refuses to take milk if offered again, what could be the reason. She has 2 tooth coming up in the lower area.

  Look forward to your response.

  ReplyDelete
 6. baby s weight is pretty good. yur feedin style is ok/ kids will have variable taste responses.

  they will refuse the same food after quiet longtime. more over negativism towards food is common among kids.

  if she is gaining weight and active then you dont have to worry about this.

  breastfeeding is paramount important to any baby.

  for hard stools you add extra sugar to milk given during night. also u can use lactulose containing syp after consulting yur doctor

  ReplyDelete
 7. Dear Doctor

  Many thanks for your response. As said, she is active with her weight gain, hence shall try offering her varieties. I presume milk is her main source of diet for the time being though solids are only an introduction.

  Regards
  Subhashini

  ReplyDelete
 8. மிகவும் பயனான பதிவு எங்களை போல் பெற்றோர்களுக்கு மிகவும்
  பயன் தரும்.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. மிகவும் அருமையான தகவல்கள். மிக்க நன்றி மருத்துவரே. என் மகள் 14 மாதம்; மிக மிகக்குறைந்த உணவே உட்கொள்கின்றாள். எடை மிகவும் குறைவாக உள்ளது. இப்பொழுதும் 'தாய்ப்பால் குடிக்கின்றாள். 6 மாதம் வரை 'தாய்ப்பால் மட்டுமே; புட்டிப்பாலை மறுத்துவிட்டாள். அவளுக்கு பசியைத் தூண்ட என்ன செய்ய வேண்டும்? கொழு கொழு என்றிருந்தால் தானே நன்றாக இருக்கும். மிக வேதனையாக இருக்கிறது தங்கள் ஆலோசனையை வேண்டி நிற்கின்றேன்.

  நன்றி.

  ReplyDelete
 11. மிகவும் அருமையான தகவல்கள். மிக்க நன்றி மருத்துவரே. என் மகள் 14 மாதம்; மிக மிகக்குறைந்த உணவே உட்கொள்கின்றாள். எடை மிகவும் குறைவாக உள்ளது. இப்பொழுதும் 'தாய்ப்பால் குடிக்கின்றாள். 6 மாதம் வரை 'தாய்ப்பால் மட்டுமே; புட்டிப்பாலை மறுத்துவிட்டாள். அவளுக்கு பசியைத் தூண்ட என்ன செய்ய வேண்டும்? கொழு கொழு என்றிருந்தால் தானே நன்றாக இருக்கும். மிக வேதனையாக இருக்கிறது தங்கள் ஆலோசனையை வேண்டி நிற்கின்றேன்.

  நன்றி.

  ReplyDelete
 12. என் மகளுக்கு 17 மாதங்கள். இப்பொழுதும் தாய்ப்பால் குடிக்கிறாள். எடை மிகக்குறைவாக இருக்கிறது 19 பவுண்ஸ்...23 பவுண்ஸ் இருக்க வேண்டும் என்பது வைத்தியரின் ஆலோசனை. சீரியல் மிக மிகக்குறைவாகவே சாப்பிடுகின்றாள். பசியைத் தூண்டி நல்ல உணவுகளை உட்கொள்ள வைக்க என்ன செய்ய வேண்டும்? தங்களது மேலான ஆலோசனையைத்தரவும். நன்றி.

  ReplyDelete
 13. ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி டாக்டர் :) #தொடருங்கள் எங்களை போன்றோருக்கு மிக உதவியாக இருக்கும் :)

  ReplyDelete
 14. Dear dr
  I have a very big doubt. am having male baby 5 months old. his birth weight was 3.3 kg and nw he s weighing 6.9kgs. The problem was from the time of his birth till now he s refusing to take feed. if i compell him then he vomits. He use to take breast feed only while he s sleeping. now i have stsrted him to give nestum rice and milkm bikis in a diluted form. bt still he s refusing and crying a lot for each feed. consulted many paediatricians. since the weight gain s normal they said no problem. give me a reason why he s like this and how to rescue the problem?

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...