Tuesday, 10 August 2010

டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல

                                               TONSILLITIS

டான்சில் என்பது  ஒரு  தேவையற்ற  கட்டி அல்ல . அது  நமது  உடலில்  நோயை  எதிர்க்கும்  ஒரு  நின நீர்  சுரப்பி  ஆகும் . நமது  உடலில்  கிருமிகள்  நுழையாமல்  தடுக்கிறது .

டான்சில்  என்பது  தொண்டையில்  உள்ள  இரு  உருண்டையான  திசு தொகுப்பு ஆகும் . இது  வீங்கினால்  வருவதே  டானசிலிடிஸ் எனபடுகிறது .

காரணங்கள்   :
     நீர் , உணவு , காற்று மூலம்   வரும்  பாக்டீரியா, வைரஸ்  முதலிய  நுண் உயிரிகளால்  ஏற்படுகிறது .

அறிகுறிகள் :
அடிக்கடி வரும்  ஜுரம்
தொண்டை வலி
காது வலி
வாய் துர் நாற்றம்
விழுங்குவதில்  சிரமம்
குரலில்  ஒரு கரகரப்பு
கழுத்தில் நெறி கட்டி
வயிறு வலி

 மருத்துவம் : 
         அறுவை சிகிச்சையை  முடிந்த  வரை  தவிர்ப்பது   நல்லது . சுத்தமான  நீர் , உணவு  அருந்தவேண்டும் .
மருந்துகளை  தொடர்ந்து  மருத்துவர் ஆலோசனை படி சாப்பிட     வேண்டும்  
திரவ  உணவுகள்  மட்டும் தரவேண்டும்
வெது வெதுப்பான  உணவுகள்  தேரவேண்டும் , சூடான & குளிர்ச்சியான பொருள்கள்  தரகூடாது
வெநிரில் உப்பு போட்டு  வாய் கொப்புளிக்க  வேண்டும்

அறுவை சிகிச்சை  எப்போது ?
இதை கடைசி  வாய்ப்பாக  செய்யவேண்டும் , ஏனெனில்  அப்பெண்ட்க்ஸ்  போல  இது ஒரு தேவை  அற்ற  உறுப்பு அல்ல . மாறாக  குழந்தையின்  எதிர்ப்பு சக்திக்கு  தேவையான  ஒன்று . 

  1 ஒரு வருடத்திற்குள்  ஆறு முறைக்கு  மேல்  டான்சில்  வீங்கி  ஜுரம் வந்தால் 
   2 quinsy  என்ற  சீழ்  கட்டி  வந்தால்
    3அடிக்கடி காதில் சீழ்  வடிந்தால்
   4 retension  cyst  எனப்படும் கட்டி  வந்தால்  

        அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
 

Sunday, 8 August 2010

மாறுகண் வரமா? சாபமா? ஒரு பார்வை

                                        மாறு கண் :SQUINT
  இரண்டு கண்களின்  ஒத்திசைவு  குறைபாடே  மாறுகண்  எனபடுகிறது . குழந்தைகள்   மனதளவில்  ஒரு வித  தாழ்வு  மனப்பான்மையை  ஏற்படுத்தும் , எனவே விரைந்து  கண் மருத்துவரை அணுகி  நலம் பெறவேண்டும்


சாதாரணமாக  நாம்  பார்க்கும் போது  இரண்டும் கண்களும்  ஒரே நேரத்தில்  ஒரே திசையில் நகரும் , ஆனால் மாறுகண் உள்ளவருக்கு  ஒரு கண் மட்டும்  ஒரே திசையில்  நகராமல்  இருக்கும் .

இதில்  இரண்டு வகைகள்  உள்ளன :
 CONCOMITTANT SQUINT
NON  CONCOMITTAT SQUINT - (PARALYTIC SQUINT)

நாம்  நேராக  பார்க்கும் போது நமது இரு கண்களும்  நடுவில் இருக்கவேண்டும் , அனால்  PARALYTIC SQUINT  என்ற  வகையில்  ஏதேனும் ஒரு  கண் எந்த  திசையிலும்  நகராமல் அப்படியே இருக்கும் .

PARALYTIC SQUINT.:  இதனை  அறுவை சிகிச்சை  மூலம் சரி செய்ய முடியும்


CONCOMITTANT SQUINT   இரண்டு  வகைப்படும்  :
                     CONVERGENT SQUNT
                      DIVERGENT SQUINT
CONVERGENT SQIUNT : நாம்  நேராக பார்க்கும் போது  ஒரு கண் மட்டும்  உள் நோக்கி , அதாவது  மூக்கு  நோக்கி போகும்.
இதில்  இரண்டு வகை உள்ளது
              ACCOMMODATIVE  TYPE
               NON ACCOMMODATIVE TYPE

ACCOMMODATIVE TYPE CONVERGENT SQIUNT :  இதனை  மூன்று வயதிற்குள்  மருத்தவரிடம் காண்பித்தால் சில  பயிற்சி  மற்றும்  கண் கண்ணாடி  மூலம்  சரி செய்ய  முடியும் . ஏன் எனில்  சில சமயம்  இது  பார்வை குறைபாடினால் வருகிறது .(HIGH HYPERMETROPIC REFRACTORY ERROR)

NON ACCOMMODATIVE TYPE : இதற்கு  அறுவை  சிகிச்சை செய்ய வேண்டும்


DIVERGENT SQIUNT:  நாம்  நேராக பார்க்கும் போது  ஒரு கண் மட்டும்  வெளி  நோக்கி , அதாவது  காது நோக்கி போகும்
DIVERGENT SQUINT  - கட்டாயம்  அறுவை சிகிச்சை  செய்தே  ஆகவேண்டும் .இது  தானாக சரி ஆகாது.

அறுவை சிகிச்சை செய்ய  சரியான நேரம் எது ?
    அனைத்து வகையான  மாறு கண்  வகையும்  5  வயதிற்குள்  செய்திட வேண்டும் , ஏனெனில்  5  வயதிற்கு பிறகு  செய்தால்  கண்ணின்  அசைவு  சரி ஆகிவிடும் ஆனால் பார்வையில் முனேற்றம்  அவ்வளவாக  இருக்காது .

அறுவை சிகிச்சை பாதுகப்பனதா ?
      ஆம் , அறுவை  சிகிச்சை  கண்ணின்  உள்ளே  செய்வது அல்ல , மாறாக  கண்ணை  சுற்றி உள்ள கண் தசையில்  செய்யபடுகிறது , எனவே பயம்  தேவை இல்லை .

PATCHING  FOR SQUINT : அறுவை  சிகிச்சைக்கு முன்  , சில நேரங்களில்  PATCHING  என்ற தற்காலிக  முறையை  கடை பிடித்தல்  நலம் . இதனால்  மறுகண்ணின்  பார்வை  இழக்காமல்  பாதுகாக்க படும் . இந்த முறையில்  நல்ல  கண்ணை  மூடி வைத்து , மாறுகண்ணுக்கு வேலை கொடுப்பது ஆகும் .இதனால் மறுகண்ணின்  செயல்பாடு அதிகரிக்கும்

குழந்தைகள் பார்வையை பாதுகாக்க :

CORRECT VISUAL HABITS FOR CHILDREN
 
படிக்கும் போதும் , டிவி  பார்க்கும் போதும்  நேராக  உட்கார்ந்தே  பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க  படுத்தோ பார்க்க கூடாது .

டிவி , கணினி  பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான  கோணத்தில் பார்க்க கூடாது .

படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும்  அரை மணி நேரத்திற்கு  ஒரு முறை  அரை நொடி கண்களை மூடி  ஓய்வு  எடுக்கவேண்டும் .

சரியான அளவில்  வெளிச்சம்  இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில்  கருவிழி  தசைகள்  சோர்வடையும் . பொதுவாக  படிப்பதற்கு  குழல்  விளக்கை விட குண்டு பல்பு  சிறந்தது  என்று    ஒரு ஆய்வு  கூறுகிறது .

அதி காலையில் படிக்கும்  பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில்  கண்கள்  புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது  கண் தசைகள் வலுவிழந்து  போகும். ( early to bed, early to rise)

வாகனத்தில்  போகும் போது  படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு  அதிகபடியான  அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...