Sunday, 31 October 2010

பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை

                     பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை .


சென்ற பதிவின் தொடர்ச்சி

                            http://doctorrajmohan.blogspot.com/2010/10/blog-post.html

                             (மேலே உள்ள லிங்கை படித்து விட்டு வரவும்) :


                                         HEMOLYTIC  JAUNDICE :
    
    ரத்த சிவப்பு அணுக்கள்  அதிகமாக  சேதம் அடைவதனால் அதிகமாக bilrubin   உற்பத்தி ஆகிறது . கலீரலால் அதனை  சுத்தம் செய்ய கால தாமதம் ஆவதால்  பிளிருபின்  அளவு அதிகரிக்கிறது . இங்கு  கல்லீரல்  நன்றாகவே உள்ளது .


காரணங்கள்    :

    I . NEONATAL  JAUNDICE : பச்சிளம்  குழந்தைகளுக்கு  வரும்  மஞ்சள் காமாலை .

                     பிறந்த  குழந்தையின் உடலில்  பொதுவாக  ரத்த அணுக்கள்  அதிகமாக இருக்கும் . மேலும்  கருவில் இருக்கும் போது உள்ள  ஹீமோ க்லோபின்  F  எனப்படும் . பிறந்தவுடன்  இந்த F  குறைந்து  ஹீமோக்ளோபின்  A  உற்பத்தி  ஆகும் . கலாவதி ஆனா  HB  F  சிதைவு  அடைந்து  வெளியேற்ற  படும். இதனால்  பிளிருபின் அளவு கூடி  குழந்தை பிறந்த 24  மணி நேரம்  கழித்து  உடலில்  மஞ்சள் நிறம் தோன்றும் . இது  படிப்படியாக  அதிகரித்து ஒரு வாரத்திற்குள்  தானாக குறைய  ஆரம்பிக்கும் .


இது  சாதாரணமாக  எல்லா குழந்தைகளுக்கும்  நடக்க கூடியதே . எனவே  இதற்கு  PHYSIOLOGICAL  JAUNDICE  என்று பெயர் .

        
எப்பொழுது  கவலை படவேண்டும் ?
I .   பிறந்த  24  மணிக்கு  முன்பாகவே  மஞ்சள் நிறம்  தோன்றுதல் - இதற்கு  அசாதாரண  மஞ்சள் காமாலை -PATHOLOGICAL  JAUNDICE  என்று பெயர் .II .தாயின்  ரத்த க்ரூப் நெகடிவ் ஆக இருந்தால் . -
              தாய்க்கு  நெகடிவ் க்ரூப்பும்  பிள்ளைக்கு  பாசிடிவ்  இருந்தால் தாயின் உடலில்  பாசிடிவ் க்ரூபிற்கு  எதிராக  ANTI BODIES  உற்பத்தி ஆகும் . இது முதல் குழந்தையை  பாதிக்காது . ஆனால் அடுத்த  பிரசவத்தின் போது  உள்ள குழதையை  பாதிக்கும் தன்மை உள்ளது .எனவேதான்  NEGATIVE க்ரூப் உள்ள தாய்க்கு  முதல் குழந்தை பிறந்தவுடன் தடுப்பு ஊசி (ANTI  D ) கட்டாயம் போடவேண்டும் .
மேலே சொன்ன நிலைக்கு  RH  INCOMPATIBILTY  என்று பெயர் .இன்னும் ஒரு நிலை உள்ளது . அதற்க்கு ABO  INCOMPATIBILITY  என்று பெயர் . தாய்க்கு O  க்ரூப்பும்  பிறந்த குழந்தைக்கு  A , B ,AB ஏதேனும் ஒன்று  இருக்கும் பட்சத்தில் வரும் மஞ்சள் காமாலை .


    RH  INCOMPATIBILTY நெகடிவ் மஞ்சள் காமாலை இரண்டாவது  குழந்தையை மட்டும் பாதிக்கும் ஆனால் ABO  INCOMPATIBILITY முதல் குழந்த்யில் இருந்தே  தனது  பாதிப்பை தொடங்கிவிடும் .PHOTOTHERAPY
மருத்துவம் :

       PHOTOTHERAPY  என்ற கண்ணாடி பெட்டியில்  வைத்தால் உடலில்  உள்ள பிளிருபின் அளவு குறைந்து சிறுநீர் வழியாக  வெளியேறி விடும் .


GARDENAL  என்ற மருந்து  கல்லீரலின்  பணியை  துரிதம் செய்து  பில்ருபினை வெளியேற்றும் .


EXCHANGE TRANSFUSION
அதிக அளவு  பிளிருபின் இருந்தால் >15 -20  ) EXCHANGE  TRANSFUSION  என்ற ரத்தத்தை மற்றும் முறையை  செய்ய வேண்டும் .

    குழந்தயின் ரத்தத்தை தொப்புள்  கொடி மூலம் வெளியே எடுத்துவிட்டு  பின் சுத்த ரத்தத்தை  ஏற்றும் முறை .


மேலே சொன்ன இரண்டும் தான்  பொதுவாக பார்க்கும்  HEMOLYTIC  JAUNDICE : இது தவிர மலேரியா ,இரத்த சிவப்பு அணுக்களின்  உற்பத்தி குறைபாடு போன்ற  இதர அரிதான காரணங்களும் உள்ளன .


HEPATIC  JAUNDICE  மற்றும்  OBSTRUCTIVE  JAUNDICE  அடுத்த பதிவில் ...

8 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நல்லபதிவு டாக்டர், ஒரு முறை மஞ்சள் காமாலை வந்து 21 அளவுக்கு சென்று மீண்டும் ரத்தம் மாற்றாமலே நார்மலான குழந்தைகளுக்கு பிற்காலத்தில் எதாவது உபாதைகள் வர வாய்ப்புள்ளதா?

  ReplyDelete
 3. நார்மல் ஆக வாய்ப்பு உள்ளது . எனினும் காது சரியாக கேட்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் .
  athetoid cerebral palsy. என்ற spasticity நிலை பிலிருபின் 20 க்கு மேல் போகும்போது வரலாம் . kernicterus என்ற நிலைக்கும் போக வாய்ப்பு உள்ளது .எனவே உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும் .

  ReplyDelete
 4. நான் தற்பொழுது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன், இது மிகுந்த வெப்ப நாடு என்பதால், உடலின் வெப்ப அளவும் அதிகரித்து, பல பிரச்சினைகள் உண்டாகிறது. குறிப்பாக காலை கடன் கழிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது, இதற்கு என்ன வழி. மேலும் கண் எரிச்சலும் உள்ளது.

  ReplyDelete
 5. dear kaja
  sorry for the dely
  நிறைய தண்ணீர் குடிக்கவும் . ஒரு நாளைக்கு 3 லிட்ர்.

  அதிகமாக அசைவம் சாப்டுவதை தவிர்க்கவும்

  நிறைய பழங்கள் , சாலட் சாப்பிடவும் ..

  ReplyDelete
 6. Hello sir,

  Our baby had such kind of மஞ்சள் காமாலை when she born. Without any medication it got reduced and she is doing normal now.
  My wife has O+ve group, my baby's B+ve.
  Is there any problem can occur in future? If so , how to prevent it?

  Regards
  Giri

  ReplyDelete
 7. @giri

  ஆம். அடுத்த குழந்தைக்கும் வரவாய்ப்பு உள்ளது . இதற்கு ABO INCOMBATIBILITY என்று பெயர். ஆனால் பயம் தேவையில்லை .

  ReplyDelete
 8. என்னுடைய தங்கைக்கு பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்த வகை என்னுடைய தங்கைக்கு நெகடிவ் ரத்த வகை. இதனால் பிறந்த குழந்தைக்கு மஞ்சகாமாலை இருக்கிறது. இதனால் குழந்தைக்கு ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்படுமா

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...