Me

My photo

i am a consultant pediatrician

Tuesday, 26 October 2010

மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!

மஞ்சள்  காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
         நமது  ரத்தத்தில்  பிலிருபின் என்ற  நிறமி  பொருள்  அதிகரிப்பதே  மஞ்சள் காமாலை ஆகும் . ஜுரம்  எப்படி  ஒரு பொதுபடையான  அறிகுறியோ  அதுபோலவே  ம.கா வும் ஒரு  அறிகுறியே தவிர  வியாதி  அதுவல்ல . (Latin bīlis, bile + ruber, red )







ரத்த சிவப்பு  அணுக்கள் 



முன்னுரை :    நமது உடலில்  கோடிகணக்கான  ரத்த சிவப்பு  அணுக்கள்  உள்ளன . இவற்றின்  வாழ் நாள்  தோரயமாக  120  நாட்கள் .


 வயதான  அணுக்கள்     மண் ஈரலில்     போய் இறந்துவிடுகின்றன .           RBC  யின்      உள்ளே  ஹீமோக்ளோபின்    என்ற    வஸ்து         பொருள்  உள்ளது  . இது    HEME  மற்றும்    GLOBIN      என்று இருபகுதியாக  உடைக்க படுகிறது .





       HEME   என்ற  பகுதி சில பல  வேதி  வினை  மாற்றங்களுக்கு    உட்பட்டு    BILIRUBIN    என்ற  மஞ்சள்  நிறமியாக மாறுகிறது .



          பிளிருபின்  ரத்தத்தில் சுற்றிக்கொண்டு  இருக்கும் . இதனை  கல் ஈரல்  ரத்தத்தில் இருந்து  பிரித்து  பித்தநீரோடு சேர்த்து நீரில் கரையும் பொருளாக  மாற்றுகிறது .

      பின்  இது  பித்த பை வழியாக  குடலை  அடைந்து  இரு வேறு  பொருள்களாக  மாறுகிறது .

 STERCOBILIN  அண்ட் UROBILINOGEN




STERCOBILIN - மலத்தின்  மூலம்  வெளியேறும் . மலத்தின்  நிறத்திற்கு  (BROWNISH YELLOW )  இதுவே காரணம் .


UROBILIN - இது  நிறம் அற்றது  , சிறுநீரில்  வெளியேறும் . டெஸ்ட்  செய்து பார்த்தால் தான்  இது  தெரியும் .


மேலே சொன்ன அனைத்தும்  சாதாரணமாக  தினமும் நடக்கும்  செயல்கள் . இதில் ஏதேனும்  ஒரு  இடத்தில  தவறு நேர்ந்தாலும்  மஞ்சள் காமாலை  அறிகுறி தெரியலாம் .


எங்கே  நடக்கலாம்  தவறு ?


I . அதிகபடியான  RBC  அணுக்கள் உருவாதல்  மற்றும்  அதிகபடியான RBC  சிதைவு அடைதல் ( HEMOLYTIC  JAUNDICE )
              
II .கல்லீரல்  செயல் இழப்பது (HEPATIC  JAUNDICE )


III . கல்லீரலில்  இருந்து வெளியேறும்  பிளிருபின்  குடலை  அடையமுடியாமல்  ஏற்படும் அடைப்பினால்    வரும் மஞ்சள் காமாலை (OBSTRUCTIVE  JAUNDICE )

பொதுவாக  CBD  எனப்படும் COMMON  BILE  DUCT  எனப்படும் இடத்தில அடைப்பு ஏற்படும் .


              விரிவான விளக்கம்  தொடர் பதிவில் :


10 comments:

  1. அருமையானக் கட்டுரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை.வாழ்த்துக்கள்
    மஞ்சள் காமாலையை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு குறைவுதான்
    அது முற்றினால் உயிரை குடிக்கும் என்பதை பல பேர் அறிந்திருக்கவில்லை
    இந்த கட்டுரைக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  3. அருமையான ப்ளாக்.

    ReplyDelete
  4. மக்களுக்கு பயன் மிக்க வலைப்பதிவு! தொடரட்டும் உங்கள் பயன் மிக்கப் பணி!!

    ReplyDelete
  5. சிறந்த தகவல்க​ளைக் ​கொண்டு இருக்கிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  6. ultimate explanation about jaundice, even when i studied i didn understand this much, now i understood lot i realised so many things about jaundice... sir chance a illla, wounderful, ultimate, amazing blogs am exciting, god bless u for ur dedicative serivce to this globe.

    senthilkumar. T
    physiotherpaist.

    ReplyDelete