Me

My photo

i am a consultant pediatrician

Thursday, 9 September 2010

குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது ? :cough & cold in children


குழந்தைகளுக்கு  வரும்  சளி , இருமல் :

           இருமல் என்பது  ஒரு முக்கியமான  பாதுகாப்பு  வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது  நமது  மூச்சுகுழாயில் தேவையற்ற  தூசு , கிருமிகள்  , நச்சு  நுழைவதை தடுக்கிறது.


  இருமலின்  அடிப்படை :

           காற்று  உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள்  சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால்  நுரையீரல்  உள்ளே  தூசு,நச்சு  செல்லாமல் தடுக்கபடுகிறது .


  சுரத்தை போலவே  இருமலும்  நமக்கு நன்மையையே  செய்கிறது . எனவே அளவான  இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே  இருமல் குறைய  syrup எடுத்துகொள்ளவேண்டும் .


சிறு குழந்தைகளின்  இருமலை  முற்றிலும்  நிறுத்தக்கூடாது , ஏனெனில்  இருமல் மூலமே உள்ளே தேங்கும்  சளி  வெளியேறும் .இருமலை  நிறுத்தினால்  அவை  நுரை யில்  சென்று  atelectasis  என்ற  நுரையீரல்  சுருங்கும்  தன்மையை  ஏற்படுத்திவிடும் .


இருமலுக்கான தொடு  நரம்புகள்  காதிலும் உண்டு  , அதனால் தான் காது குடையும் போது  இருமல் வருகிறது .




மருத்துவம் :

  குழந்தைகளுக்கு முற்றிலும்  இருமலை கட்டுபடுத்த  கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து  ஆதற்கு வைத்தியம்  செய்ய வேண்டும்

வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால்  இருமல் மருந்து தரலாம்

தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில்  வாந்தி   - ஆகிய  நேரங்களில்  மருந்து தரவேண்டும்



மூக்கின்  முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும்  தொண்டையில் நீர் வடியும் இதனால்  இருமல் வந்துகொண்டே  இருக்கும்(postnasal  drip ) . இதற்க்கு  மூக்கு சொட்டு  மருந்து போட்டாலே  இருமல் குறைந்து விடும்.


சைனுசிடிஸ்  என்ற நிலையிலும்  சைனசில்     இருந்து  நீர் , சளி கசிவதால்  தொடர்ந்து  இருமல் இருக்கும் .


வெண்ணீரில் உப்பு  போட்டு வாய் கொப்புளிக்க  வேண்டும்

மூக்கிற்கு  சொட்டு மருந்து  போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி  பிடிக்கவேண்டும் .

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் . 



எப்பொழுது மருத்துவரை அணுக  வேண்டும் :
    


 சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்

    





முச்சு  விடும் வேகம்  அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு  ஏற்ப மாறும்.

            பிறப்பு  முதல்  2  மாதம் வரை - > 60  / ஒரு நிமிடம்

                 2  மாதம்  முதல் ஒரு வயது  வரை ->50  /ஒரு நிமிடம்

                  ஒரு வயது மேல் 5  வயது வரை -> 40  / ஒரு நிமிடம்



குழந்தை  அழாமல் உள்ளபோது  குழந்தை  மூச்சு விடும் வேகத்தை  ஒரு முழு நிமிடத்திற்கு  எண்ணவேண்டும். மேலே சொன்ன  அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா  சளியின்  அறிகுறியாக இருக்கலாம் .





பின் இணைப்புகள்  :


19 comments:

  1. நல்ல தேவையான தகவல்களை தருகிறீர்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  2. புதிய தகவல். நன்றி!

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல தகவல்கள், குழந்தைகள் மூச்சு விட சிரமப்படும் போது பார்க்க கஷ்டமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். :)

    ReplyDelete
  4. அன்பின் நண்பர் அவர்களுக்கு தங்கள் தளத்தை பற்றி தங்கள் முன் அனுமுதியில்லாமல் என் தளத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறேன் உங்கள் நிழற்படத்தையும் பயன்படுத்தியிருக்கிறேன் மன்னிக்கவும் ஆட்சேபனை இருந்தால் அவசியம் நிழற்படத்தை நீக்கி விடுகிறேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  5. மிகவும் பெறுமதி வாய்ந்த தகவல்.
    நன்றி.

    ReplyDelete
  6. thanks robin, mayil@viji, malgudi& virutcham, for your time and comments

    ReplyDelete
  7. Very Useful Informations. Thanks to Dr. Rajmohan


    M.RAJENDRAN,POSTAL DEPT, DINDIGUL 62401

    ReplyDelete
  8. //இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது நமது மூச்சுகுழாயில் தேவையற்ற தூசு , கிருமிகள் , நச்சு நுழைவதை தடுக்கிறது. //

    நல்ல தகவல்.

    ReplyDelete
  9. thanks mr.rajendran, amaithy appa sir

    ReplyDelete
  10. from past one week my baby is affected by cough and cold. Thanks for the Tips...

    ReplyDelete
  11. gsk rep said,
    useful information,
    thanks and regards,
    s.senthilkumar

    ReplyDelete
  12. நல்ல பதிவு!என் போன்ற தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    என் ஏழு மாத மகனுக்கு, கடந்த பதினைந்து நாட்களாக வறட்டு இருமல் உள்ளது.. தினமும் இரண்டு முறையாவது வாந்தி எடுத்து விடுவான்..

    டாக்டர் அறிவுரைப்படி contus ஒரு வாரமாக கொடுத்து வருகிறேன்.. சிறிது இருமல் குறைந்துள்ளது ஆனாலும் நிற்க வில்லை..வாந்தியும் எப்போதாவது எடுக்கிறான்..என்ன செய்யலாம்?

    ReplyDelete
  13. @nanjil ,

    vomiting after continous cough is common and no need to panic about this.

    dry cough may persist even after the infection is fully cured . infection in the throat produce irritation which will subside after few days. so if there is no fever , no nasal discharge then no need to worry .

    ReplyDelete
  14. எங்களது ஒரு வயது ஒரு மாத மகன் இருமலால் துன்பப்படுகிறான். ஒரு வாரங்களுக்கு முன்பு ஜுரம் இருந்தது. மருத்துவரிடம் காட்டிய பின், ஒரு வாரத்தில் நின்று விட்டது. ஆனால் இருமல் மட்டும் ..தொடர்ச்சியாக இல்லையென்றாலும்.. தூங்கும் நேரங்களில், தூங்கி விழிக்கும் நேரங்களில், பகலில் சில நேரங்களில் அடிக்கடி வருகிறது. பெரியர்வர்கள் இருமுவது போல அவன் இருமும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. போன வாரம் சில நேரங்கள் உண்ட பிறகு வாந்தி எடுத்தான். உண்ட உணவாக இல்லாமல் சளி சேர்ந்த கோழையாக வந்தது. இப்போது வாந்தி நின்று விட்டது. இருமல் மட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. போன வாரம் மருத்துவரிடம் காட்டியதற்கு நுரையிரல் நன்றாக இருக்கிறது. கவலைப்பட அவசியல் இல்லை. பத்து நாட்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்தால் கொண்டு வரவும் எனச் சொல்லிவிட்டார். மருந்து எதுவும் கொடுக்கவில்லை. உங்களது ஆலோசனை தேவை. இது வியாதிக்கான அறிகுறியா? ஏதேனும் கை மருந்து கொடுக்கலாமா? என்ன கொடுப்பது? நன்றி.

    ReplyDelete
  15. @venkki
    சளி குறைந்த பிறகும் தொண்டையில் உள்ள எரிச்சல் காரணமாகவும் மூக்கின் பின்புறம் நீர் வடிந்து தொண்டைக்கு செல்வதாலும் இருமல் சில நாட்கள் இருக்கும் . இது குறித்து கவலை கொள்ள தேவை இல்லை .



    இரண்டு வாரத்திற்கு பின்பும் இருமல் இருந்தால் மருத்துவரை அணுகவும் .



    குழந்தைகள் சளியை வெளியே துப்ப தெரியாததால் முழுங்கிவிடும் .அது இருமும் போது வந்தியுடன் கலந்து வரும் . இதுவும் சாதரனமானதே.

    மாலை வேளையில் ஒரு முறை மட்டும் இருமல் மருந்து தரவும்

    ReplyDelete