Wednesday, 22 September 2010

குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :



குழந்தைகளுக்கு  வரும் ஆஸ்த்மா :

(asthma is a Greek word that is derived from the verb aazein, meaning to exhale with open mouth, to pant. The expression asthma )

ஆஸ்த்மா  என்பது  அலர்ஜியினால்   வரும் ஒரு  நாள்பட்ட  சுவாச மண்டல  கோளறு ஆகும் .
இது நாள்பட்ட கோளறு ஆகும் . எனவே  பொறுமை  அவசியம் .

காரணங்கள் :

      பரம்பரை  ஜீன்கள்
      சுற்று சூழல்


நடப்பது என்ன ?

     உணவிலும் , காற்றிலும்  உள்ள  அலர்ஜி உண்டாக்கும்  பொருள்கள்  உடலில் சென்ற வுடன்  நமது  நுரையீரலின்  உள்ளே உள்ள  சிறு சிறு  காற்று குழாய்கள் சுருங்க  ஆரம்பிக்கும் . ஆரம்பத்தில்  இந்த நிலை  தற்காலிகமானது , ஆனால் போக போக  இதனால்  காற்று குழாய்கள் சுருங்கி  மூச்சு விட  சிரமம் ஏற்படும் . இது ஒருவித  சத்தத்தை  உண்டாக்கும் -(வீசிங்  )

அறிகுறிகள் :

  தொடர்ச்சியான இருமல்


மூச்சை வெளிவிடும்போது  வீசிங் - அதாவது  விசில்  ஓலி

நெஞ்சை  அடைப்பது போன்ற  இறுக்கம்

மூச்சு விட சிரமம்


சோர்வடைதல்

பேச முடியாமல்  மூச்சு வாங்குதல்


ஆஸ்த்மாவை  தூண்டுபவைகள் :

ஒவ்வாமை  பொருள்கள் : பூனை , நாய் போன்ற பிராணிகளின்  முடி , கரப்பான் பூச்சியின் எச்சம், டஸ்ட்  மைட், பூக்களின்  மகரந்தம் , புற்களின் பூக்கள்

டஸ்ட் மைட் - கண்ணுக்கு தெரியாமல் தலையணை  போர்வை  முதலியவற்றில்   இருக்கும் . இதன்  எச்சத்தினால் அடிக்கடி  ஒவ்வாமை வரும் . ஒரு தலையணையில்  ஒரு கோடி  என்ற  அளவில் கூட  இவை இருக்கும் . டஸ்ட் மைட்  அலர்ஜி  அல்ல , ஆனால் அதன்  மலம் - ஒரு நாளைக்கு  குறைந்தது  20  முறை போகும் - அலர்ஜியை  ஏற்படுத்தும் .

டஸ்ட் மைடின் கழிவு  பொருள்


டஸ்ட்  மைட்

  













வாகன  புகை மற்றும்  சிகரட்  புகை 
 
உடலுக்கு போடும்  சென்ட் , பாடி ஸ்ப்ரே

குளிர்ந்த காற்று

உடற்பயிற்சி , அதிகபடியான வேலை

மன  அழுத்தம்(படிப்பு ,வீட்டு பாடம்) , அதிகபடியான  சிரிப்பு கூட
 தடுப்பு முறைகள் & மருத்துவம் : அடுத்த பதிவில் ...

8 comments:

  1. மிக பயனுள்ள செய்திகள். தற்கால சூழலில் இதனால் அவதி படுபவர்கள் மிக அதிகம். தங்களின் ஆக்கம் படிப்பினையும் , அது பற்றின அறிவையும் தருவது சிறப்பு. ஆனால் இங்குள்ள "அறிவு ஜீவிகளும், " வலையுலக அதி மேதாவிகளும் " கவலை படுவது எந்திரன் சினிமா ஓடுமா ? ஓடாதா ?? பிரபுதேவா நயன்தாரா இவர்களின் கல்யாணம் நடக்குமா நடக்காதா?? பற்றித்தான்.

    "பன்றிகளின் முனால் முத்துக்களை எறியாதீர்கள்" அன்பரே!

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . மருத்துவரிடம் மனம் விட்டு பேச இயலாத சகோதரி களுக்காகவும் , (விளக்கம் கூற மருத்துவர்களுக்கும் பொறுமை இல்லை) அவர்களின் குழந்தைகள் பயன் பெறவே இந்த வலைப்பூ ஆரம்பிக்க பட்டது .

    இணையம் ஒரு கடல் . இந்த வலைப்பூ ஒரு துளி .. நன்றி

    ReplyDelete
  3. மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. good morning dr.

    my son is 13 months old, we dont have weasing problem in our heredity even in my wifes family too, even my my child plays in water drinks normal plain water he never had a cold or cough but two days before in midnight he had heavy cough and he breathed through mouth, immediately we took him hospital and he had nebulaizer, dr.said its season change factor, guide me in this, i am terribly shocked and i cant belive my son having this type of problem and i cant digest this, what to do and not to do

    ReplyDelete
  5. dear vijay
    dont worry. since the air passage of small kid is very narrow, even the ordinary cough and cold can produce wheeze like sound in 13 months.

    1. avoid frequent head bath , oil bath (once in 10 days- head bath, never oil bath)
    2. avoid talcum powder on face ,
    3. keep the child away from pet animals
    4.dont use body spray& scent near the child-not even for you

    as the child grow the symptom will come down.
    feel free to send your Q to rajmohandr@gmail.com

    ReplyDelete
  6. குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா பற்றி மிகவும் பயனுள்ள பதிவு. தடுப்பு முறைகள் மற்றும் மருத்துவம் பற்றிய உங்களின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நன்றி,
    கார்த்திக்

    ReplyDelete
  7. Sir, Looked this up to tell guidelines in tamil to my patients. Awesome as usual. asthma தடுப்பு முறைகள் & மருத்துவம் : அடுத்த பதிவில் ..when are you going to write that up?

    ReplyDelete
  8. தங்களின் மேலான சேவைக்கு நன்றி !

    ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...