Saturday, 18 September 2010

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

உங்கள்  குழந்தையின்  ஞாபக  சக்தியை  அதிகரிப்பது எப்படி ?

  


ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று  சொல்வார்கள்  , ஆனால்  நம் குழந்தை  படித்தததை  எல்லாம் மறுக்கும் போது  மறதி ஒரு சாபம் போல  நமக்கு தோன்றும் .


ஞாபகம்   குறித்து சில  தகவல்கள் :


    


     நாம்  பார்க்கும்  , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும்  அனைத்துமே  நமது  ஞாபகங்கள்  ஆகும் .  

  இது முதலில் குறைந்த  நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே  மறந்து விடும் .


இந்த சென்சரி  மெமரியில் நாம்  முழு கவனத்தை செலுத்தி  ஆழ்ந்து கவனித்தால்  அது ஷார்ட் டெர்ம் மெமரி  ஆக  பதிவாகும் .இதுவும்  சில மணித்துளிகளுக்கு  மட்டும்  இருக்கும் .


ஷார்ட் டெர்ம் மெமரி  ஐ திரும்ப திரும்ப  செய்யும்போது  அது நாள் பட்ட  ஞாபக சக்தியாக  மாறும் .


எனவே  ஞாபக சக்திக்கு  மிகவும் முக்கிமானது  இரண்டு :
                ஆர்வம் மற்றும்  கவனம்

                 திரும்ப திரும்ப செய்தல் .
மேலும்  நாள் பட்ட ஞாபகம்  கூட மறக்க  வாய்ப்பு  உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம்  வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.


நாள் பட்ட ஞாபகத்தை  இரண்டு வகையாக  பிரிக்கலாம்  :
         explicit & implicit

explicit   என்பது  கொஞ்சம் யோசித்தால்  நினைவுக்கு  கொண்டுவர முடியும்


implicit என்பது  யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு  கொண்டு வருதல்


நினவு  திறனை  சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை    எடுத்துகொள்வோம்


   யாரோ ஓட்டுவதை  நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
   முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது  - ஷார்ட் டெர்ம் மெமரி
    தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம்  explicit மெமரி
  தயவே இல்லாமல்  ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்


  1 . எதையும்  தாய் மொழியிலேயே  சிந்திக்க வேண்டும் , நீங்கள்  படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ   அதில் சிந்தித்து  மனதில் பதிய செய்ய வேண்டும்


2 . புரியாமல்  எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும்  பரவாயில்லை .


3 . முழு கவனம்  மிக அவசியம் .


4 . mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு  கற்று
 கொடுங்கள்
         உதரணம்  news - north ,east,west,south


5 . படித்த வுடன் எழுதி  பார்க்கும் பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில்  கடமைக்கு  எழுதும்  சடங்கு  பயனில்லை.


6 . படங்களுடன் கூடிய  தகவல்கள்  மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப  வரைந்து பார்க்க சொல்லவேண்டும்


7 . நல்ல உறக்கம்  அவசியம் . குறைந்தது  8  மணி நேர தூக்கம்  கண்டிப்பாக தேவை


8 .இரவில்  சீக்கிரம்  தூங்கி  அதிகாலை  படிக்கும்  படி  சொல்லவேண்டும் .


9 . தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும் .


10 . மாவு சத்து உள்ள உணவுகள்  மந்த நிலையை  ஏற்படுத்தும் , எனவே புரதம்  நிறைந்த   செரிக்கும்  உணவை செர்த்துகொள்வது நல்லது.


10 comments:

 1. நல்ல தகவல்களை தருகிறீர்கள் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கிறேன் நேரமிருந்தால் பதில் அளியுங்களேன் சமீபத்தில் நண்பர் ஒருவர் அதிகம் பழக்கமில்லை அடிக்கடி பணி நிமித்தமாக அலைபேசியில் உரையாடியிருக்கிறேன் ஆனால் ஒரு நாள் அவர் என்னை காண வந்திருந்தார் ஆனால் அவர் பெயரை என்னால் ஞாபகத்தில் கொண்டுவர நானும் நெடு நேரம் முயற்சி செய்தும் கொண்டுவரமுடியாமல் ஒரு வழியாய் சமாளித்தேன் இது எதனால் எனக்கு இது முதல் முறையும் அல்ல.

  வாழ்க வளமுட்ன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 2. நல்ல பயனுள்ள பதிவுகள், தொடரட்டும் உங்கள் படைப்புகள்

  ReplyDelete
 3. dear GSR
  இது எல்லாருக்கும் வருவதுதான் . பயம் தேவையில்லை .

  ReplyDelete
 4. அருமையான தகவல்கள்.
  சில விழியங்கள் ஆழமாக பதிகின்றன, சிஅல் விழியஙக்ள் நினைவிருக்கும் ஆனால் சொல்ல வராது

  ReplyDelete
 5. குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு வலைப் பூ. தொடரட்டும் உங்களின் ஆத்மார்த்தமான இந்த புனித தொண்டு.

  ReplyDelete
 6. great effort doctor, thanks for the post

  ReplyDelete
 7. thanks a lot doctor. all are useful informations and tips. very good job.you are doing a great job.

  ReplyDelete
 8. thanks for the useful post doctor

  ReplyDelete
 9. வாழ்க தமிழ் வளர்க உலகளாவிய மக்கள்,
  நினைவு திறன் அதிகரிக்க விளக்கம் தந்துள்ளீர்கள். மாணவ மாணவியர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

  ஓவியர் A.L.S,
  எழுத்தாளர், பொது சேவை,
  A.L.S School of Arts,
  K.T.M Street, காயல்பட்டினம் 628-204.

  ReplyDelete
 10. A/L பரீட்ரசைக்கு எப்படி படிப்பது

  ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...