Wednesday, 18 August 2010

குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி

 GROWING PAIN/ GROWTH PAIN





                                
         குழந்தைகளுக்கு  வரும்  வளர்ச்சி வலி

வளரும்  குழந்தைகள்  பெரும்பாலும்  இரவு நேரத்தில்  கால்  வலிப்பதாக கூற  கேட்டு இருக்கலாம் , இதற்கு  " வளர்ச்சி  வலி " என்று பெயர்

இது பொதுவாக  3 -5  மற்றும் 8 -12  ஆகிய  வயதினரை  அதிகம்  பாதிக்கும்
, ஏன் என்றால்  இந்த குழந்தைகளுக்கு  வளர்ச்சி  மிக வேகமாக  இருக்கும்

இரவில் வரும் இந்த வலி  கால்களை  , குறிப்பாக தொடையின்  முன்புறம் , கெண்டை கால் , முழங்கால்  ஆகியவற்றில்  இருக்கும் .

வலி- எலும்பு  மற்றும்  மூட்டில் இருந்து வருவது அல்ல , மாறாக  தசையில்  இருந்தே  வருகிறது . பகலில்  அதிகமாக  ஓடி , ஆடி  விளையாடுவதாலும்  , காலுக்கு செல்லும்  அதிக  ரத்த ஓட்டத்தினாலும்  வலி வருகிறது

மருத்துவம் :
  பொதுவாக  மருத்துவம்  தேவை இல்லை
  வெந்நீர் ஒத்தடம்  தரலாம்

  மசாஜ்  செய்யலாம்
  உடற்பயிற்சி  - கால்களை  நீட்டி  ஸ்ட்ரெச்  செய்ய வேண்டும்

   பாரசிடமால், ப்ருபென் மாத்திரைகளை  மருத்துவர்  ஆலோசனையின் பேரில்  தரலாம்

சுரம்  மற்றும்  மூட்டு வீங்கினலோ , சிவந்து  போனாலோ  மருத்துவரை  உடன் அணுகவும் .
 (ஆங்கிலத்தில்  படிக்க இங்கே  சொடுக்கவும்)
http://babyclinik.blogspot.com/2010/08/growth-pain-growing-pains.html

5 comments:

  1. நல்ல தகவல் நன்றி மருத்துவரே..

    ReplyDelete
  2. பயனுள்ளத் தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. புன்னகை தேசம்.
    நன்றி


    Sriakila
    நன்றி!

    ReplyDelete
  4. சார்
    உங்கள் ப்ளாக் கு எங்க வெப்சைட்<a href="www.tamilnurse.com>Tamilnurse.com</a>ல லிங்க் கொடுக்க அனுமதி உண்டா சார்?
    நான் ரெண்டு மெயில் உங்களுக்கு அனுப்பி இருக்கேன், இதுவரை எந்த பதிலும் இல்ல அதான், நன்றி சார்

    ReplyDelete
  5. Dr Really thanks for this message. My daughter is 10 yrs old and she is complaining leg pain for the past 6 months . Haem, calcium and vit D are ok. Now I understood the reason for her pain. Thanks a lot Dr

    ReplyDelete

குழந்தை அழுதால் என்ன கவனிக்கவேண்டும்?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒ...