Me

My photo

i am a consultant pediatrician

Sunday, 29 August 2010

குழந்தைகளுக்கு வரும் காது வலி :


குழந்தைகளுக்கு  வரும்  காது வலி :

        காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் . 


மூக்கை   சிந்துவதால்  காதின் உள்ளே  அழுத்தம்  அதிகரிப்பதால்  காது வலி  அதிகமாகும் . எனவே  சிந்தாமல்  துடைத்துவிட  வேண்டும் .


காதுக்கு  பட்ஸ்  போடவே  கூடாது . அப்படி செய்தால்  வெளியே உள்ள  அழுக்கு  உள்ளே தள்ள படுமே  தவிர  வெளியே  வராது. பஞ்சை  கொண்டு  விளக்கு திரி போல திரித்து  துடைத்து  எடுக்க வேண்டும் .



தாய்ப்பால் படுத்து கொண்டு   தரக்கூடாது , குழந்தையின்   தொண்டைக்கும்  நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian  tube ) வழியே பால் உள்ளே சென்று  சீழ்  பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும்  காதில்  சீழ்  பிடிக்கும் .


http://www.doctorrajmohan.blogspot.com/
மூக்கு அடைப்பு  இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து  போட்டு கொள்ள வேண்டும் .

3 comments:

  1. மிகவும் முக்கியமானத் தகவல். என் குழந்தையும் காது வலியால் அடிக்கடித் துடித்திருக்கிறாள். இயர் டிராப்ஸ் போட்டு நீங்கள் சொல்வது போல் பஞ்சைத் திரியாக்கி தான் சுத்தம் செய்திருக்கிறேன்.

    பயனுள்ளத் தகவல்கள் கொடுப்பதற்கு நன்றி!

    ReplyDelete