Me

My photo

i am a consultant pediatrician

Tuesday, 10 August 2010

டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல

                                               TONSILLITIS

டான்சில் என்பது  ஒரு  தேவையற்ற  கட்டி அல்ல . அது  நமது  உடலில்  நோயை  எதிர்க்கும்  ஒரு  நின நீர்  சுரப்பி  ஆகும் . நமது  உடலில்  கிருமிகள்  நுழையாமல்  தடுக்கிறது .

டான்சில்  என்பது  தொண்டையில்  உள்ள  இரு  உருண்டையான  திசு தொகுப்பு ஆகும் . இது  வீங்கினால்  வருவதே  டானசிலிடிஸ் எனபடுகிறது .

காரணங்கள்   :
     நீர் , உணவு , காற்று மூலம்   வரும்  பாக்டீரியா, வைரஸ்  முதலிய  நுண் உயிரிகளால்  ஏற்படுகிறது .

அறிகுறிகள் :
அடிக்கடி வரும்  ஜுரம்
தொண்டை வலி
காது வலி
வாய் துர் நாற்றம்
விழுங்குவதில்  சிரமம்
குரலில்  ஒரு கரகரப்பு
கழுத்தில் நெறி கட்டி
வயிறு வலி

 மருத்துவம் : 
         அறுவை சிகிச்சையை  முடிந்த  வரை  தவிர்ப்பது   நல்லது . சுத்தமான  நீர் , உணவு  அருந்தவேண்டும் .
மருந்துகளை  தொடர்ந்து  மருத்துவர் ஆலோசனை படி சாப்பிட     வேண்டும்  
திரவ  உணவுகள்  மட்டும் தரவேண்டும்
வெது வெதுப்பான  உணவுகள்  தேரவேண்டும் , சூடான & குளிர்ச்சியான பொருள்கள்  தரகூடாது
வெநிரில் உப்பு போட்டு  வாய் கொப்புளிக்க  வேண்டும்

அறுவை சிகிச்சை  எப்போது ?
இதை கடைசி  வாய்ப்பாக  செய்யவேண்டும் , ஏனெனில்  அப்பெண்ட்க்ஸ்  போல  இது ஒரு தேவை  அற்ற  உறுப்பு அல்ல . மாறாக  குழந்தையின்  எதிர்ப்பு சக்திக்கு  தேவையான  ஒன்று . 

  1 ஒரு வருடத்திற்குள்  ஆறு முறைக்கு  மேல்  டான்சில்  வீங்கி  ஜுரம் வந்தால் 
   2 quinsy  என்ற  சீழ்  கட்டி  வந்தால்
    3அடிக்கடி காதில் சீழ்  வடிந்தால்
   4 retension  cyst  எனப்படும் கட்டி  வந்தால்  

        அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
 

3 comments:

  1. மற்றவர்களுக்குப் பயன்படக்கூடிய அருமையான பதிவு.

    ReplyDelete
  2. என் பிள்ளைக்கு டான்சிலிடிஸ் இருக்கு. அடிக்கடி பாதிக்காமல் இருக்க எங்கள் டாக்டர் திராட்சை,கமலா பழம், ஐஸ்க்ரீம், கலர்ட் foods, சாகலேட், க்ரீம் இருக்கும் கேக் இதையெல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொல்லுறார். ஆனால் இதெல்லாம் கொடுக்காமல் இருக்க மனமில்லை. இது உண்மையா?

    ReplyDelete