Me

My photo

i am a consultant pediatrician

Friday, 6 August 2010

உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7 ,தாய் பாலால் தாய்க்கும் பல நன்மைகள்

உலக  தாய்ப்பால்  வாரம்  அகஸ்ட்  1 -7  வரை  கொண்டாட  படுகிறது . தாய்ப்பாலின் அருமைகளை  விளக்கவே இந்த  விழா கொண்டாட படுகிறது .
உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7




#குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .


முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு  போடும் முதல் தடுப்பு மருந்து என்றும்  இதை சொல்லலாம் .

இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .



எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .



குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்


குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .

எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .



சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.

பால் கொடுப்பதால் தாய்க்கு  மார்பு புற்றுநோய்  , ஓவரி  புற்றுநோய்   வராமல்  தடுக்கப்படும் .

பிறந்த  ஒரு மணி நேரத்திற்குள்  பால் கொடுத்தால் தாய்க்கு  உதிரபோக்கு  குறையும் . ஏனெனில்  பால்  குடிக்கும் போது  oxytocin  என்ற  ஹோர்மோன்  சுரப்பதால்  அது கர்பப்பையை  சுருங்க செய்து  ரத்தபோக்கை குறைக்கும் .

தொடர்ந்து  ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து  வந்தால்  மாதவிடாய் தள்ளிபோடபடும்  , இதன் முலம்  அடுத்த பிரசவத்தை தடுக்கமுடியும் .

தாய் பாலால்  தாய்க்கும் பல நன்மைகள்  உண்டு . எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய் பால் மட்டுமே தரவேண்டும்


தண்ணீர் கூட தர தேவை இல்லை ( கோடையில் கூட ) ஏனென்றால் பாலில் 88 % நீர் உள்ளது .

ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தரவேண்டும்

தாய் பால்இரண்டு வயது வரை தர வேண்டும் .

குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது அளவில் குறைவாக , மஞ்சள் நிறத்தில் இருக்கும் . குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மருந்து சீம்பால் ஆகும் . எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வேண்டும் .

( கழுதைப்பால் , சீனிதண்ணி, சர்க்கரை ஆகிய பொருள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது , இது தவறான பழக்கம் .)

பால் பரிசுத்தமானது , எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே .

பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன .(secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) எனவே வயிற்றுபோக்கு , சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும் .

பால் இயற்கையானது எனவே எளிதில் செரிக்கும் .

குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான CYSTIENE ,TAURINE ஆகிய சத்துக்கள் தாய்பாலில் சரியான அளவில் உள்ளன . ( கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும் , ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது . ) தாய் பால் மட்டுமே சரியான ஊட்டசத்தை சரியான நேரத்தில் தரும்

5 comments:

  1. நல்ல தகவல்கள். மேற்க்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் தாய்ப்பாலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

    ReplyDelete
  2. தாய்ப்பால்
    தவமருந்து
    தவிர்க்காமல் தர வலியுறுத்துவோம்

    ReplyDelete
  3. தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    ReplyDelete
  4. குழந்தை இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதமாக தாய்ப்பால் குடிக்கிறது. இதனால் தாய்க்கு ஏதேனும் உடல் நல குறைபாடு வருமா ?

    ReplyDelete
  5. @ ravi.

    முதலில் நன்றி .



    தாய்ப்பால் இரண்டு வருடங்கள் வரை தருவதற்கு முதலில் வாழ்த்துக்கள் ! தாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை , ஆனால் குழந்தைக்கு சரியான அளவில் இணை உணவு கிடைகிறதா என்பதே மட்டும் உறுதி செய்து கொள்ளவும் ! பால் ஒரு அருமையான ஊட்டசத்து என்றாலும் வைட்டமின் D அதில் குறைவு ,எனவே எலும்பு வளர்ச்சிக்கு மிதமான சூரிய வெளிச்சத்தில் மாலையில் அரை மணி நேரம் விளையாட அழைத்து செல்லவும் !

    ReplyDelete