Me

My photo

i am a consultant pediatrician

Sunday, 20 June 2010

pacifier - சூப்பான் தேவையா?

PACIFIER எனப்படும்    சூப்பான் உபயோக  படுத்தினால்  மட்டுமே சில குழந்தைகள்  அழாமல் இருக்கும் . விரல் சூப்புதல்  என்பது  குழந்தை வயிற்றில்  இருக்கும் போதே  ஆரம்பிக்கும் பழக்கம் . சப்புதல்  குழந்தைக்கு  ஒரு  மன  அமைதியை  தருகிறது . ஆனால்  விரல் சப்புவதால்  சில தீங்குகள்  வரலாம் , அப்பொழுது  PACIFIER எனப்படும் சூப்பான்களை  உபயோகிக்கலாம் .

சில கருத்துக்கள் :
பசியால்  அழும்  போது    சூப்பான் உபயோகிக்க கூடாது . எதனால் குழந்தை  அழுகிறது என்று  பார்த்து  அதை சரி  செய்யவேண்டும் .

தொடர்ந்து  உபயோகிக்க கூடாது . இதனால்   பற்களின்  அமைப்பு  மாற வாய்ப்பு உள்ளது .

சூப்பான்களை  சுத்தமாக  வைத்துக்கொண்டால்   நோய்  தொற்று வராமல் தடுக்கலாம்

     எடை குறைவான  குழந்தைகள் , நோயுற்ற  குழந்தைகள்   PACIFER உபயோகிப்பதால்  உடல் நிலையில் நல்ல    முன்னேற்றம்   காணப்படும் .

    SIDS(SUDDEN INFANT DEATH SYNDROME)  எனப்படும்   நிலையில் சில  குழந்தைகள்  தூக்கத்தில் காரணம் இதுவென்று  தெரியாமல்  இறக்கும் . சூப்பான்  உபயோகித்தால்  SIDS வராமல் தவிர்க்கலாம் .

No comments:

Post a Comment