Me

My photo

i am a consultant pediatrician

Sunday, 20 June 2010

விடாமல் அழும் குழந்தை

குழந்தைகள் சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் கீழே :

வயிற்று வலி :(COLIC): இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும் . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு சிறிது ஊப்பிஇருக்கும் . பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும் .
முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு இது அதிகமாக காணப்படும் .
அழும் போது குழந்தயை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும் .(drugs- colimex drops, cyclopam drops, coicaid drops, anafortan drops)

காது வலி : இதுவும் மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் தருவது , சளி , மூக்கு அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகி அழும் . (drugs- otogesic drops, ciplox drops, candibiotic drops)
மூக்கு அடைப்பு : படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும் . (treatment-nasoclear drops, nasion drops, otrivin drops)

பூச்சி கடி : குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி, எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .

இதர காரணங்கள் :
தடுப்பூசி போட்டபின் வரும் வலி

சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்

DIAPER RASH-ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு .

இறுக்கமான உடைகள்

வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை
cont...

No comments:

Post a Comment